-->

தமிழீழத்தேசியக்கொடி பாகம் 2


தமிழீழத் தேசியக்கொடி
ஒரு நாட்டின் தேசிய
இனங்கள் ;,நாட்டு மக்கிளின்
பண்புகள்,ஆட்சி,இறைமை
என்பவை உட்பட அந்த
நாட்டைக் குறிக்கின்ற
ஒட்டுமொத்தமான பொதுச்
சின்னமாகத் தேசியக்
கொடி விளங்குகின்றது .
ஒவ்வொரு நாட்டின்
இயல்புகள்
நிலைமைகள் ,எண்ணங்களின்
வெளிப்பாடாக அந்தந்த
நாட்டுக் தேசிய கொடிகளின்
சின்னம் நிறம் அளவு என்பன
வேறுபட்டிருக்கும் .தேசியக்
கொடியின்
அளவு பெரும்பாலும் 3:2 என்ற
அளவினதாகவே இருக்கின்றது.
சில நாடுகளின் தேசியக்
கொடிகள் 2:1, 1:1 என்ற
அளவினைக் கொண்டதாகவும்
இருக்கின்றது
நாம்
போற்றி வணங்குதற்கூடாக
தேசியக் கொடிக்கு வணக்கம்
செலுத்தப்படுகின்றது .
தேசியக்கொடியை வணங்குவது
நாட்டை வணங்குவது போலாகும்.
நாட்டை போற்றி
வணங்குவதற்கூடாகத்
தேசியக் கொடிக்கு வணக்கம்
செலுத்தப்படுகின்றது .
தேசியக்கொடியை வணங்குவது
நாட்டை வணங்குவது போலாகும்.
நாட்டின் தலைவர்களைவிட,
படை, ஆட்சி என்பவற்றைவிட
உயர்ந்ததாகத் தேசியக்
கொடி மதிக்கப்படுகின்றது.
எனவேதான் எந்த
ஒரு நாட்டிலும் எந்தச்
சிறப்பு நிகழ்வுகளின்
போதும் நாட்டின்
தலைவர் ,படை,அரசலுவலர்,
குடிமக்கள் அனைவரும்
கொடிவணக்கம் செய்கின்றனர்.
தேசியக்
கொடிக்கு வழங்கப்படுகின்ற
மதிப்பு ,சிறப்பு என்பன
அந்த நாட்டைச்
சென்றடைகின்றன.அது போன்றே
தேசியக்
கொடிக்கு ஏற்படுத்தப்படும்
இழிவு ,
புறக்கணிப்பு என்பனவும்
அதன் நாட்டைச்
சென்றடையும் ,எனவேதான்
தேசியக்கொடிக்கு
ஏற்படுத்தப்படும்
இழிவு பெருங்குற்றமாகக்
கருதப்படும்
அக்குற்றத்துக்குக் கடும்
ஒறுப்பு (தண்டணை)
வழங்கப்படுகின்றது.
எமது தேசியத் தலைவர்
மேதகு வே .பிரபாகரன்
அவர்களால் 1977 ஆம்
ஆண்டு,விடுதலைப் புலிகள்
இயக்கத்திற்கென
உருவாக்கப்பட்டுப்
பயன்படுத்தப்பட்டு வந்த
புலிக்கொடியில் இருந்த
எழுத்துக்கள்
நீக்கபட்டு தமிழீழத்தின்
தேசியக்கொடியாக 1990 ஆம்
ஆண்டு தேசியத் தலைவர்
அவர்களால்
அறிவிக்கட்பட்டது . 1990
ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம்
நாள் மாவீரர் எழுச்சிவாரத்
தொடக்க நாளன்று முதல்
தடவையாகத் தமிழீழத்
தேசியக் கொடி எமது தேசியத்
தலைவர் அவர்களால்
ஏற்றிவைக்கபட்டது .
அன்றிலிருந்து
தமிழீழத்தில் நடைபெறும்
சிறப்பு நிகழ்வுகள்
தமிழீழத்
தேசியக்கொடி ஏற்றப்பட்டே
தொடங்கப்படுகின்றன .
தேசியக்கொடி
ஏற்றப்படும்போது தமிழீழத்
தேசியக்கொடி வணக்கப்பண்
பாடப்படுகின்றது .
தலைவர்கள்,
சிறப்புக்குடிமக்கள்
போன்றோரின்
மறைவையொட்டி ஏற்படும்
நாட்டின் துயர
நிகழ்வுகளின்போது
தேசியக்கொடி
கொடிக்கம்பத்தின்
உச்சிவரை ஏற்றப்பட்டு
கொடிக்கம்பத்தின்
நடுப்பகுதிவரை இறக்கிக்
கட்டிப்
பறக்கவிடப்படுவது வழக்கம்.
இதன்மூலம் நாட்டின் துயரம்
உணர்த்தப்படுகின்றது .
எமது நாட்டை அமைப்பதற்கான
விடுதலைப்
போராட்டத்தை வீறு
கொள்ளவைத்த ,
மக்களை விடுதலை
இயக்கத்தின்பால்
ஈர்த்து அணி திரளவைத்த
தமிழீழ விடுதலைப் புலிகள்
இயக்கத்தின் கோட்குறியான
( இலட்சினையான) பாயும்
புலியே எமது
தேசியக்கொடியின் நடுவில்
அமைந்திருக்கிறது .
எமது தேசியக்கொடியை மஞ்சள்,
சிவப்பு,கறுப்பு,வெள்ளை
ஆகிய நான்கு நிறங்கள்
அழகுபடுத்துகின்றன .
தமிழீழ
மக்களுக்கு ஒரு தாயகம்
உண்டு . அந்த தாயகம்
அவர்களது சொத்துரிமை.
தமிழீழ மக்கள்
ஒரு தனித்துவமான தேசிய
இனம் என்பதால்
அவர்களுக்குத்
தன்னாட்சி (சுயநிர்ணய)
உரிமை உண்டு.இந்த
தன்னாட்சி உரிமை அவர்களது
அடிப்படை அரசியல்
உரிமை .தமது தாயகத்தை
மீட்டெடுத்து,தன்னாட்சி
உரிமையை நாட்டுவதற்கு
தமிழீழ மக்கள்
மேற்கொண்டுள்ள தேசிய
விடுதலைப் போராட்டம்
அறத்தின்பாற்பட்டது .மனித
தர்மத்தை அடிப்படையாகக்
கொண்டது என்பதை மஞ்சள்
நிறம் சுட்டி நிற்கின்றது.
ஏற்றத் தாழ்வுகளற்ற,
வர்க்க, சாதிய,
முரண்பாடுகளற்ற
பெண்ணடிமைத்தனமற்ற
புரட்சிப்பாங்கான அரசியல்
இலக்கைச் சிவப்பு நிறம்
குறியீடு செய்கின்றது .
கரடுமுரடான, சாவும்
அழிவும் தாங்கொணாத்
துன்பங்களும் நிறைந்த
வழிக்கூடாகச்
சென்று எமது இலக்கை
அடைவதற்கு வேண்டிய
உருக்குப்போன்ற உள்ள
உறுதியைக் கறுப்பு நிறம்
குறித்துக்காட்டுகின்றது.
அமைப்பினதும்
போராட்டத்தினதும்
தூய்மையை ,
நேர்மையை வெள்ளை நிறம்
வெளிப்படுத்தி நிற்கின்றது
.
எமது தேசியக் கொடியை நாம்
எமது உயிரிலும் மேலாகப்
போற்றிப்
பேணிப்பாதுகாப்பது எமது
தலையாய கடமையாகும் .கொடிவணக்க ஒழுங்குமுறை
தேசியக்கொடி ஏற்றப்படும்
கொடிக்கம்பத்தின் உயரம்
22 அடிக்குக் குறைவாக
இருக்கக்கூடாது.
தேசியக்கொடியின்
நீளம் 4 அடியாகவும்
உயரம் 3 அடியாகவும்
இருத்தல் வேண்டும்
தேசியக்கொடியுடன்
வேறு கொடிகளும்
ஏற்றப்படின் அக்கொடிகள்
தேசியக்கொடியைவிடப்
பெரிதாக இருக்கக்கூடாது.
தேசியக்கொடியேற்றப்பட்ட
கொடிக்கம்பத்தைவிட ஏனைய
கொடிக்கம்பங்கள் 2
அடி உயரம் குறைந்ததாக
இருக்க வேண்டும் .
தேசியக்கொடியுடன்
பிறநாடுகளின்
தேசியக்கொடிகள்
ஏற்றப்படுவதாயின்
ஒரே அளவு உயரமுள்ள
கொடிக்கம்பத்தில்
ஒரே அளவான
கொடிகளை ஏற்றலாம்.ஆனால்
எமது தேசியக்கொடிக்கு
இடப்புறமாகவே
ஏனையநாடுகளின் கொடிகள்
பறக்கவிடப்படவேண்டும் .
எமது தேசியகொடியுடன்
பிறநாட்டுத்
தேசியக்கொடிகளை
ஏற்றுவதாயின்
எமது தேசியக்கொடி
ஏற்றப்பட்டதன்
பின்பே ஏனைய
தேசியக்கொடிகள்
ஏற்றப்படவேண்டும்.
கொடிகள்
இறக்கப்படும்போது ஏனைய
கொடிகள்
இறக்கப்படவேண்டும் .
பின்பு இறுதியாகவே எமது
தேசியக்கொடி இறக்கப்பட
வேண்டும் .ஏனைய கொடிகள்
பறந்துகொண்டிருக்போது
எமது தேசியக்கொடியை
ஒருபோதும்
இறக்கக்கூடாது .
ஊர்வலங்களில்
தேசியக்கொடியை எடுத்துச்
செல்வதாயின் கொடியின்
உயரத்தின் 4
பங்கு உயரமான கம்பத்தில்
கட்டி நெஞ்சுக்கு
நேராகவோ அன்றி
வலத்தோளிலோ ஏந்திச்
செல்ல
வேண்டும் .தேசியக்கொடியை
ஏந்திச்செல்பவருக்கு
முன்பாக வேறு எந்தக்
கொடியை ஏந்துபவரும்
முந்திச் செல்லக்கூடாது.
கூட்ட மேடைகளில்
பேச்சாளரின்
தலைக்கு மேலாக பின்
புறத்தட்டியில்
தேசியக்கொடியைக்
கட்டலாம் .
தேசியக்கொடியில்
எதுவும்
எழுதப்பட்டிருக்கக்
கூடாது .
தேசியக்கொடி கிழிந்தோ,
சிதைந்தோ போனால் அதைப்
பழந்துணியாகப்
பயன்படுத்தவோ
குப்பைத்தொட்டியில்
வீசவோகூடாது .
தேசியக்கொடியை வணிக
விளம்பரத்துக்கோ ,
விரிப்பாகவோ அன்றி
வேறெந்தத்
தேவைகளுக்காகவோ பயன்படு;
த்தக்கூடாது.
குறிப்பிட்ட சில உயர்
அரச பணியகக்
கட்டிடங்களில் மட்டும்
தேசியக்கொடி
கொடிக்கம்பத்தில்
ஏற்றப்படலாம் .
கட்டிடங்களில்
கொடிக்கம்பத்தில்
ஏற்றப்படும்
தேசியக்கொடி நாள்தோறும்
கதிரவன் எழுந்ததற்குப்
பின்னர்
ஏற்றப்பட்டு மறைவதற்கு
முன்பாக
இறக்கப்படவேண்டும் .
ஆட்சிப்பொறுப்பிலுள்ளோர
்,தலைவர்கள் ,உயர்
அலுவலர்கள் வீடுகளிலும்
எந்நாளும் பகலில்
தேசியக்கொடி பறக்க
விடப்படலாம் .
வெளிநாடுகளிலுள்ள
எமது கிளைகளிலும்
தூதரகங்களிலும் பகலில்
எந்நாளும்
எமது தேசியக்கொடி பறக்க
விடப்படலாம் .
குறிப்பிட்ட சில
நாட்களில் மட்டும்
பொதுமக்கள் வீடுகளில்
கட்டிடங்களில் ,
தேசியக்கொடி
பறக்கவிடப்படலாம்.இவை
முறையாகக் கம்பங்களில்
மட்டுமே
ஏற்றப்படவேண்டும் .
தெருவுக்குக்
குறுக்காகவோ பக்கமாகவோ
கயிறுகளில் தேசியக்கொடி
தொங்கவிடப்படக்கூடாது .
தேசியக்கொடியைத்
தலைகீழாக
பறக்கவிடக்கூடாது.
தேசியக்கொடியிலுள்ள
புலி ,கொடிக்கம்பத்தைப்
பார்த்தவாறு
பறக்கவிடக்கூடாது.
புலியின் பார்வை
கொடிக்கம்பத்துக்கு
எதிர்ப்புறமாகக்
கொடி பறக்கும் பக்கமாக
இருக்கும் வகையில் கொடி
பறக்கவிடப்படவேண்டும் .
தேசியக்கொடியைக்
கீழிருந்து
பறந்தபடியிருக்கும்
நிலையிலேயே ஏற்றவேண்டும்
. மடித்தபடி மேலே ஏற்றி
அங்கிருந்து விரிந்து
பறக்கும் வகையில்
தேசியக்கொடி
ஏற்றக்கூடாது .
தேசியக்கொடியை ஏற்றுபவர்
கொடி வணக்கம் செலுத்த
அணிவகுத்து நிற்கும்
மக்களுக்கும் ,
கொடிக்கம்பத்திற்கும்
இடையில்
நின்று கொடியை ஏற்றுதல்
கூடாது . தேசியக்கொடியை
ஏற்றும்போது அனைவரும்
எழுந்து நின்று வணக்கம்
செலுத்த வேண்டும் .
தேசியக்கொடி
ஏற்றப்படுவதுபோல்,
இறக்கப்படுவதும்
ஒழுங்கு முறையிலான
சிறப்பு நிகழ்வாகவே
இருக்கவேண்டும் .
கொடியை இறக்குபவரும்
முதன்மையானவராக ,
தகுதியானவராக இருத்தல்
வேண்டும் .
தேசியக்கொடி
இறக்கப்படும்பொழுது
நிலத்தில்
விழாது எட்டக்கூடிய
உயரத்திலேயே வைத்து
கைகளில் ஏந்தி எடுத்தல்
வேண்டும்.
தேசியக்கொடி இறக்கும்
நிகழ்வின்போது கையொலி
எழுப்பக்கூடாது .
அந்நிகழ்வு அமைதியாக
நடைபெறவேண்டும் .
தேசியக்கொடி பொதுவாக
மாலை 6.00
மணிக்கு முன்னர்
முறைப்படி
இறக்கப்படவேண்டும்.
கொடியேற்றித்
தொடக்கப்படும்
நிகழ்சிகள் மாலை 6.00
மணிக்குப் பின்னரும்
தொடருமாயின்
நிகழ்ச்சி முடிவுற்றதும்
கொடியை முறைப்படி
இறக்கலாம் .
கொடியேற்றித்
தொடங்கப்படும்
நிகழ்ச்சி நாட்கணக்கில்
தொடருமாயின் அந்த
நிகழ்ச்சிகள்
முடிவுறும்
வரை தேசியக்கொடி இரவும்
தொடர்ச்சியாகப்
பறக்கவிடப்படலாம் .
நிகழ்ச்சிகள்
முடிவடைந்தபின்
முறைப்படி தேசியக்கொடி
இறக்க வேண்டும் .

தமிழீழ உட்கட்டுமானங்கள்


*தமிழீழ மாவட்டங்கள்
{1}யாழ்ப்பாணம்
{சப்ததீவுகள் உட்பட}
{2}மன்னார்
{3}கிளிநொச்சி
{4}வவுனியா
{5}திருகோணமலை
{6}மட்டக்களப்பு
{7}அம்பாறை
{8}புத்தளம்
{9}முல்லைத்தீவு
*தமிழீழ உட்கட்டுமான
அமைப்புகள்
வழங்கற் பிரிவு
மருத்துவப் பிரிவு
கொள்முதல் பிரிவு
பரப்புரைப் பிரிவு
தமிழீழப் பொறியியற்றுறை
வெடிபொருள்
தொழில்நுட்பப் பிரிவு
கணிணி தொழில்நுட்பப்
பிரிவு
இலத்திரனியல்
தொழில்நுட்பப் பிரிவு
போர்கருவித்
தொழிற்சாலை
தமிழீழ இராணுவ
விஞ்ஞானக் கல்லூரி
விடுதலைப்புலிகளின்
ஆங்கிலக் கல்லூரி
திரைப்பட , புத்தக
மொழிபெயர்ப்புத் துறை
புலனாய்வுத் துறை
தமிழீழ
விடுதகலைப்புலிகளின்
அரசியற்றுறை
தமிழீழ விளையாட்டுத்
துறை
தமிழீழக்
கல்வி மேம்பாட்டுக்
கழகம்
தமிழீழக்
கலை பண்பாட்டுக் கழகம்
தமிழீழ நீதித்துறை
தமிழீழ நிர்வாக துறை
தமிழீழ நிதித் துறை
தமிழீழ வைப்பகம் (வங்கி)
தமிழீழக் காவல்துறை
விடுதலைப்புலிகளின்
சுகாதாரப் பிரிவு
சூழல் நல்லாட்சி ஆணையம்
தமிழீழ வனவளப்
பாதுகாப்புப் பிரிவு
தமிழீழப் பொருண்மிய
மேம்பாட்டு நிறுவனம்
பொருண்மிய மதியுரையகம்
தமிழீழக்
காலநிலை அவதானிப்பு
நிலையம்
தமிழீழக் காட்டுமானப்
பொறியியற்செயலகம்
வடகிழக்கு மனித உரிமைகள்
செயலகம்
ஓளிக்கலைப்பிரிவு (
நிதர்சனம், ஒளி வீச்சு)
விடுதலைப்புலிகளின்
வெளியீட்டுப் பிரிவு
புலிகளின் குரல்
( வானொலி)
விடுதலைப்புலிகள்
பத்திரிகை
எரிமலை சஞ்சிகை
தமிழீழத் தேசியத்
தொலைக்காட்சி
*தமிழீழபடையணிகள்
கடற்புலிகள்
வான்புலிகள்
லெப். கேணல் இராதா விமான
எதிர்ப்புப் படையணி
மாலதி படையணி (
பெண்புலிகள்)
சோதியா படையணி (
பெண்புலிகள்)
- மகளிர் படையணியில்
முதன் முதல் உருவாகிய
படையணி
அன்பரசி படையணி (
பெண்புலிகள்)
சிறுத்தைகள்
கரும்புலிகள்
கடற்கரும்புலிகள்
கேணல் கிட்டுப்
பீரங்கிப் படையணி
லெப். கேணல் விக்ரர்
கவசவாகன எதிர்ப்புப்
படையணி
லெப். கேணல்
குட்டிசிறி மோட்டார்ப்
படையணி
ஜெயந்தன் படையணி
சார்ள்ஸ்
அன்ரனி சிறப்புப் படையணி
இம்ரான் பாண்டியன்
படையணி
இம்ரான் பாண்டியன்
உந்துருளி அணி
எல்லைப் படை
துணைப்படை
*****

தேசியத்தலைவரின் எண்ணத்திலிருந்து


THALAIVAR SINTHANAIKAL *குட்டக் குட்டத்
தலைகுனிந்து அடிமைகளாக,
அவமானத்துடன் வாழ்ந்த
தமிழரைத்
தலை நிமிர்த்தி
தன்மாத்துடன்
வாழ வைத்த
பெருமை எமது விடுதலை
இயக்கத்தையே சாரும்.
*தமிழ் மக்களின்
சுதந்திரத்திற்காகவும்,
கௌரவத்திற்காகவும்,
பாதுகாப்பிற்காகவும்
தமது இன்னுரை அர்பணித்துள்ள
மாவீர்களான தியாகிகள் ,
காலம் காலமாக எமது இதயக்
கோவிலில் பூசிக்கப்பட
வேண்டியவர்கள் .
*எதிரியால்
ஆக்கிமிக்கபட்டிருக்கும்
எமது மண்ணை முதலில்
மீட்டெடுப்பது இன்றைய
வரலாற்றின் தேவை . இந்த
வரலாற்று நிர்ப்பந்தத்தை
நாம் தட்டிக்கழிக்க
முடியாது .
*தங்களது உயிர்களையும்,
உடமைகளையும் பாதுகாக்கும்
சக்திவாய்ந்த ஒரு தேசியப்
படையுடன்
இணைந்து சுதந்திரத்
தமிழீழத்தை நிறுவினாலெழிய,
ஒரு போதும் தமிழர்கள்
பாதுகாப்பாக இருக்கப்
போவதில்லை .
*விடுதலைப் போராட்டத்தில்
மக்கள் வெறும்
பார்வையாளராக இராது ,
நேரடிப் பங்காளிகளாக
மாறவேண்டும் .
*இது கரும்புலிகள்
சகாப்தம் , இடியும்
மின்னலுமாகப் புலிகள்
போர்க் கோலம் பூண்டு விட்ட
காலம் ***தமிழீழ
தேசியத் தலைவரின்
சிந்தனையிலிருந்து***
*நிலத்தில்
புதையுண்டிருக்கும்
ஆயிரமாயிரம் சமாதிக்
கற்களும்
விடுதலையையே குறியீடு
செய்து நிற்கின்றன .
*வீதிகளில், சந்துகளில்,
சுவர்களில் நாம்
சந்திக்கும்
மாவீரர்களது
திருவுருவங்களும்
விடுதலையின்
சாட்சியங்களாகவே எமக்கு
காட்சி தருகின்றன.
*நாம் யாரையும்
ஏமாற்றவும்
இல்லை , துரோகம்
இழைக்கவும்
இல்லை . ஆனால் எம்மை யாரும்
ஏமாற்றினால்
அல்லது துரோகம் இழைத்தால்
நாம் பதிலடி கொடுக்கத்
தயங்கமாட்டோம் .
*சத்தியத்திற்காய் சாகத்
துணிந்து விட்டால்
ஒரு சாதாரண மனிதப்
பிறவியும் சரித்திரத்தைப்
படைக்க முடியும் .
*மற்றவர்கள்
இன்புற்றிருக்க வேண்டும்
என்பதற்காகத்
தன்னை இல்லாதொழிக்கத்
துணிவது தெய்வீகத்
துறவறம் , அந்தத்
தெய்வீகப்
பிறவிகள்தான்
கரும்புலிகள்.
*விடுதலைப் போராட்டம்
என்பது இரத்தம் சிந்தும்
ஒரு ரணகளம்
பயிற்சி - தந்திரம் -
துணிவு இந்த மூன்றும்
ஒரு படையணிக்கு அமையப்
பெறுமாயின்
வெற்றி நிச்சயம் .
*சுதந்திரம் இல்லாமல்
மனித
வாழ்வில் அர்த்தமே இல்லை.
*நாம்
துணிந்து போராடுவோம்,
சத்தியம் எமக்குச்
சாட்சியாக நிற்கின்றது,
வரலாறு எமக்கு வழிகாட்டியாக
நிற்கின்றது .
*கேணல் கிட்டு ஒரு தனிமனித
சரித்திரம் , ஓய்வில்லாத
புயலாக வீசும்
எமது விடுதலை வரலாற்றில்
ஒரு காலத்தின் பதிவு
இலட்சியத்தால்
ஒன்று பட்டு எழுச்சி கொண்ட
மக்களை எந்த
ஒரு சக்தியாலும்
ஒடுக்கிவிட முடியாது.
*மக்களின் துன்ப
துயரங்களில் பங்கு கொண்டு,
அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத்
திட்டமிட்டுச்
செயலாற்றுவதுதான்
உண்மையான அரசியல் வேலை.
*விழிப்புத்தான்
விடுதலைக்கு முதல் படி.
விடுதலைப் போராட்டம்
என்பது இரத்தம் சிந்தும்
புரட்சிகர அரசியற்ப் பாதை.
*இன்றைய காலத்தின்
தேவைக்கேற்ப -
வரலாற்று ஓட்டத்திற்கு அமைய
கலை இலக்கிய கர்த்தாக்கள்
புதுமையான , புரச்சிகரமான
படைப்புக்களை உருவாக்க
வேண்டும் .
*எமது மொழியும், கலையும்,
பண்பாடும் எமது நீண்ட
வரலாற்றின் விழுதுகளாக
எமது மண்ணில் ஆழமாக
வேரூன்றி நிற்பவை .
எமது தேசிய
வாழ்விற்கு ஆதாரமாய்
நிற்பவை .
*எமது போராட்டத்தின்
வலிமை எமது போராளிகளின்
நெஞ்சுரத்திலிருந்தே
பிறக்கின்றது .
*மனித ஆன்மாவின் ஆழமான
அபிலாசையாகவே மனிதனிடம்
சுதந்திர தாகம்
பிறக்கின்றது .
*சிங்களப்
பேரினவாதமானது
தமிழினத்தின்
தேசிய அன்மாவில் விழுத்திய
ஆழமான வடுக்கள் ஒருபோதும்
மாறப்போதில்லை .
*மலைபோல மக்கள்
சக்தி எமக்கு பின்னால்
இருக்கும் வரை , எந்தப்
புதிய சவாலையும் நாம்
சந்திக்கத் தயார் .
*மாவீரர்கள் காலத்தால்
சாவதில்லை . அவர்கள்
காலத்தை உருவகிப்பவர்கள்.
*எமது மக்கள்
மீது அடக்குமுறை
கட்டவிழ்த்து
விடப்பட்டுள்ளது,
அதனின்றும்
மக்களை விடுவித்து எமது
மக்களின்
சுதந்திரத்தையும் ,
பாதுகாப்பiயும்
நிலைநாட்டும் வரை, நாம்
ஆயுதம் ஏந்திப்
போராடுவதைக்
கைவிடமாட்டோம் .
*இயற்கை எனது நண்பன்,
வாழ்க்கை எனது
தத்துவாசிரியன்,
வரலாறு எனது வழிகாட்டி.
*உழைப்பவனே பொருளுலைகைப்
படைக்கின்றான், மனித
வாழ்க்கையின் அடிப்படைத்
தேவைகளைப்
பூர்த்தி செய்கின்றான் .
*நாம் தமிழீழப் பெண்
சமூகத்தின் மத்தியில்
ஒரு பெரிய
புரட்சியை
நிகழ்தியிருக்கின்றோம்.
தமிழர்
வரலாற்றிலேயே நடைபெறாத
புரட்சி ஒன்று தமிழீழத்தில்
நடைபெற்றிருக்கின்றது .
*சான்றோரைப் போற்றுவதும்,
கற்றோரைக் கௌரவிப்பதும்
தமிழர்களாகிய எமது மரபு ,
எமது சீரிய பண்பாடு.
எமது சொந்தப் பலத்தில்
நாம் வேரூன்றி நிலையாக
நிற்பதால் , மற்றவர்களின்
அழுத்தங்களுக்குப்
பணிந்து கொடாமல்
தலை நிமிர்ந்து
நிற்கமுடிகின்றது .
*அனைத்துத் தமிழ்
மக்களும்
ஒரே இனம் என்ற தேசாபிமான
உணர்வுடன் போராட்டத்தில்
பங்கு கொண்டால்
எமது விடுதலை இலட்சியம்
வெற்றி பெறுவது நிச்சயம்
மாவீரர்கள் ஒரு சத்திய
இலட்சியத்திற்காக
மரணிக்கிறார்கள் .
அவர்களது சாவு, சாதாரண மரண
நிகழ்வு அல்ல, எனது தேச
விடுதலையின் ஆன்மீக
அறை கூவலாகவே மாவீரர்களது
மரணம்
திகழ்கின்றது .
ஒரு உயிர்
உன்னதமானது என்பதை நான்
அறிவேன் , ஆனால் உயிரிலும்
உன்னதமானது எமது உரிமை,
எமது சுதந்திரம்,
எமது கௌரவம்.
*கரும்புலிகள்
எமது இனத்தின் தற்காப்புக்
கவசங்கள் - எமது போராட்டப்
பாதையின் தடை நீக்கிகள் -
எதிரியின் படைபலத்தை மனப்
பலத்தால் உடைத்தெறியும்
நெருப்பு மனிதர்கள் .
*எமது மக்கள்
சுதந்திரமாகவும்,
கௌரவமாகவும்,
பாதுகாப்பாகவும்
வாழவேண்டும் . இந்த
இலட்சியம்
நிறைவேறவேண்டுமாயின் நாம்
போராடியே ஆகவேண்டும் .
*நான் பெரிது நீ
பெரிது என்று வாழாமல்
நாடு பெரிதென்று வாழுங்கள்.
நாடு நமக்குப் பெரிதானால்
நாம் எல்லோரும் அதற்குச்
சிறியவர்களே ,
எமது நிலையற்ற வாழ்விலும்
பார்க்க நாட்டின்
வாழ்வே பெரியது .
*எமது விடுதலைப்
போராட்டத்தின்
பளுவை அடுத்த பரம்பரை மீ
சுமத்த நாம்
விரும்பவில்லை . எமது கடின
உழைப்பின் பயனை அவர்கள்
அனுபவிக்க வேண்டும் .
*ஒரு விடுதலை வீரனின்
சாவு,
ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல
அந்தச் சாவு ஒரு சரித்திர
நிகழ்வு , ஓர் உன்னத
இலட்சியம் உயிர்பெறும்
அற்புதமான நிகழ்வு .
உண்மையில்
ஒரு விடுதலை வீரன்
சாவதில்லை , அவனது உயிராக
இயங்கி வந்த இலட்சிய
நெருப்பு என்றுமே அணைந்து
விடுவதில்லை .
*தமிழீழ மண்ணில்
ஆயுதப்புரட்சி
இயக்கத்திற்கு
அத்திவாரமிட்டவர்கள்
நாம் . தமிழனின் வீர மரபைச்
சித்தரிக்கும் சின்னமாக
உதித்த எமது இயக்கம் ,
வீரவரலாறு படைக்கும்
புரட்சிகர விடுதலைச்
சக்தியாக
விரிவடைந்து
வளர்ந்திருக்கின்றது.
*ஒடுக்கப்படும்
மக்களே ஒடுக்கு முறைக்கு
எதிராகப்
போராட வேண்டும் ,
அநீதிக்கு ஆளாகி
நிற்பவர்களே அநீதியை
ஒழித்துத்துக்
கட்ட முன்வர வேண்டும் .
எந்த
ஒரு விடுதலை இயக்கமும்
தனியாக நின்று ,
மக்களுக்குப் புறம்பாக
நின்று ,
விடுதலையை வென்றெடுத்ததாக
வரலாறு இல்லை .
அது நடைமுறைச் சாத்தியமான
காரியமுமல்ல .

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner