-->

பிரிகேடியர் விதுர்சா அக்கா அவர்களின் வீர வரலாறு...


பிரிகேடியர் விதுர்சா அக்கா அவர்களின் வீர வரலாறு...

 
பிரிகேடியர் விதுர்சா
கந்தையா ஞானபூரணி
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
தாய் மடியில்:29.09.1969
மண் மடியில்:04.04.2009

விடுதலைப் புலிகளின் மகளீர் படைப் பிரிவின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று. ஒரு புதுமைப் பெண்ணை, புரட்சிகரப் பெண்ணை எமது விடுதலை இயக்கம் படைத்திருக்கிறது. இந்த முகவுரை விதுசா பற்றிய நினைவுப் பகிர்வை அறிமுகஞ் செய்யப் போதுமானது.
குருக்கள் கந்தையா, ஞனாம்பிகை இணையருக்கு ஞானபூரணி என்ற இயற்பெயர் பூண்ட விதுசா மூத்த மகளாக 1969 செப்ரம்பர் 29ம் நாள் கரவெட்டி கப்புதூவில் பிறந்தார்.

ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு 04-APR-2009

ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு



வன்னியில் போர் உக்கிரமம் பெற்ற காலப்பகுதிகள் ஒவ்வொரு நாளும் மக்கள் படுகொலைகளும் போராளிகளின் வீரச்சாவும் அன்று நடந்தேறிக்கொண்டிருந்தன. இவை தமிழ் மண்ணின் வரலாறுகளாக அன்று காணப்பட்டன.
அதன் நினைவுகளை மீட்டிப்பார்க வேண்டிய தேவை தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒர் கடமை. அந்தவகையில்தான் கிளிநொச்சியினை விட்டு பின்னகர்ந்த மக்களும் விடுதலைப்புலிகளும் இறுதியான தாக்குதல்களை எதிரிமேல் தொடுத்தவண்ணம் எதிரிக்கு பாரிய இழப்புக்களையும் ஏற்படுத்திக்கொண்டார்கள்.
இந்நிலையில் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் இறுதிக்கட்டமாக ஆனந்தபுரம் பகுதி அமைகின்றது. புதுக்குடியிருப்பின் வடகிழக்கில் உள்ள பகுதியாக ஆனந்தபுரம் காணப்படுகின்றது. இந்த இடத்தில்தான் விடுதலைப்புலிகளின் நெருப்பாற்று தாக்குதல்கள் தீச்சுவாலைகளுக்கும் மத்தியில் இடம்பெற்றன.

பிரிகேடியர் தீபன் (04-APR-2009)

◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌


பிரிகேடியர் தீபன்
விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன்.
வவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் – 1997 ஆம் ஆண்டில் – தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன்.
புளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார்.

நச்சுக் குண்டு வீசி படுகொலை செய்யப்பட வீரத்தளபதி பிரிகேடியர் தீபன்





2009ஆம் ஆண்டு 03ஆம் மாதம் 4 ம் திகதி நேரடி மோதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிய இந்திய – இலங்கை இராணுவம் கோழைத்தனமாக நச்சு குண்டு வீசி படுகொலை செய்தனர். இதில் வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் அண்ணா மற்றும் பல போராளிகள் வீரகவியமனவர்கள்.
வரலாற்று நாயகர்களில் வரலாறுகள் என்றும் எங்களுடன்! புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் அக்கினி சமரில் வீரவரலாறான எங்கள்அங்கினி குஞ்சுகளை நச்சுக்குண்டுகள் கொண்டு இனஅழிப்பினை அழித்த சிங்கள இனவெறியாளர்களின் இனக்கொடூரங்கள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை அக்கினிகுஞ்சுகளை இன்றும் எங்கள் மனங்களில் இறுக பற்றுகின்றோம்.
அன்று 2009ஆம் ஆண்டு 03ஆம் மாதம் இறுதி நாட்கள் ஆனந்தபுர மண்ணில் அக்கினி சுவாலைமூண்ட தாக்குதல்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன இவ்வாறான தாக்குதல்களுக்கு விடுதலைப்புலிகளின் போராளிகளை

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner