-->

தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைகள்

***தமிழீழ
தேசியத்
தலைவரின்
சிந்தனையிலிருந்து***

*நிலத்தில்
புதையுண்டிருக்கும்
ஆயிரமாயிரம்
சமாதிக்
கற்களும்
விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன.

*வீதிகளில்,
சந்துகளில்,
சுவர்களில்
நாம்
சந்திக்கும்
மாவீரர்களது திருவுருவங்களும்
விடுதலையின்
சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன.

தமிழீழ பாடல் வரிகள் { 1 }






{1}
தமிழா! நீ பேசுவது தமிழா

அன்னையைத்தமிழ் வாயால் 'மம்மி' என்றழைத்தாய்
அழகுக்குழந்தையை 'பேபி' என்றழைத்தாய்
என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்
இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்

தமிழா! நீ பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய் உதவாத சேர்க்கை
'ஒய்ப்' என்றாய் மனைவியை பார் உன் போக்கை
இறவை 'னைட்' என்றாய் விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய் அறுத்தெறி நாக்கை

தமிழா! நீ பேசுவது தமிழா?

Z தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சியில் ஈழத்தமிழ்மக்கள் அவலக்குரல் குறித்ததான {முழுமையான காணொளி}

Z தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சியில் ஈழத்தமிழ்மக்கள் அவலக்குரல் குறித்ததான {முழுமையான காணொளி}





http://www.youtube.com/watch?v=rJYTqgLy6KU&feature=feedu



ஏறுது பார் கொடி ஏறுதுபார்





ஏறுது பார் கொடி ஏறுதுபார்
செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே வீறிடும் கொடியிது -

தமிழ் மக்களைக் காத்த நம்மான மாவீரரை வாழ்த்திடும் கொடியிது

புலி வீரத்தின் கொடியிது மாவீரரின் கொடியிது

எத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில் ஏறிய கொடியிது -

பெரும் சத்திய வேள்வியில் செத்தவர் மீதினில் சாத்திய கொடியிது

தமிழ் ஈழத்தின் கொடியிது
புலி ஏந்திய கொடியிது

சாதிகள் சண்டைகள் சாய்த்து விழுத்திய சாதனைக் கொடியிது -

சங்கு ஊதி முழங்கிட ஊர்மனையாவிலும் உலவிய கொடியிது

சமதர்மத்தின் கொடியிது
எங்கள் தாயவள் கொடியிது
ஆயிரம் ஆயிரம் வீறென வேங்கைகள் ஆக்கிய கொடியிது -

பிரபாகரன் என்றிடும் காவிய நாயகன் போற்றிடும் கொடியிது
தமிழ் தேசத்தின் கொடியிது -
எங்கள் தேசிய கொடியிது




http://youtu.be/siq12k_Dujg



கேணல் ராயு வீரவணக்கம் 25-08-2002




கேணல் ராயு வீரவணக்கம்


 

(25-08-2011) கேணல் ராயு அண்ணையின் நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்தளபதி புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று சாவடைந்தார்.

விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன.

தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழிநுட்பப் பிரிவான “கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன”த்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.
ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ

கேணல் ராஜு அவர்களின் 9 ம் ஆண்டு வீர வணக்க நாள் 25 /08 /2011

கேணல் ராஜு அவர்களின் 9 ம் ஆண்டு வீர வணக்க நாள் 25 /08 /2011







கேணல் ராஜு இற்கும் இதே நாளில் வீர காவியம் ஆன ஏனைய மாவீரர்களுக்கும் வணங்கா மண் இணையத் தளம் வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றது.






கேணல் ராயு
அம்பலவாணன் நேமிநாதன்
யாழ்-மாவட்டம் சுன்னாகம்

நாமும் நிமிர்வோம் தமிழனாக ! !

நாமும் நிமிர்வோம் தமிழனாக



நாமும் நிமிர்வோம்
தமிழனாக..!
எங்களின் நூலகம்
எரித்தவர் ஏற்றினர்

சிங்கள இனமதன்
சிறுமைத் தனமதை !
கல்வியில் உயர்ந்த
கண்ணியம் நிறைந்த
நற்றமிழ் இனமதை
நாசப் படுத்தவே
தென் திசையிருந்து
வந்த வானரர்
கொடுஞ்செயல் புரிந்தனர் !
பச்சைக் கட்சியின்
மகாவலி அமைச்சராய்
இருந்த காமினி
இழிநிலை செயலதைத்
தலைமையேற்றவன்
தரப்பார் நடத்தியே
கொடுமை புரிந்தனன் !
அறிவின் வறுமையில்
ஆடிய சிங்களம்
அரியதோர் சுரங்கமாய்
திகழ்ந்த நூலகத்தை
தீயிட்டுக் கொளுத்தியே
திமிர்தனம் புரிந்தனர் !
தென் னாசியாவிலே
புகழ் பெற்ற நூலகம்
தீயிலே சாய்ந்ததை
செவி வழி அறிந்த
டேவிட் அடிகளார்
உயிர்தனை துறந்தே
உயிரற்ற உடலமாய்
தரையிலே சாய்ந்தார் !
கல்வியில் செழித்த
இனமொன்றின் மீது
கட்டாயத் தடைகளை
இட்ட போதிலும்
தரப்படுத்தலை
ஏற்றிய போதிலும்
தமிழனின் ஆற்றலை
முடக்கிட முடியாது
சிரமதிலேறிய சினமது
பின்னர் விசராக்கிய
வெறியினில் நின்று
ஆடிய சிங்களம் இன்று
அடிமேல் அடி வாங்கியே
அவமானப் பட்டு
நிற்பதைக் காண்கிறோம் !
அவமானப்பட்டு நின்றால்
போதுமா (?)
அவலத்தைத் தந்தவரக்கு
அவலத்தைக் கொடுப்போம்
அண்ணன் போட்டுள்ள
அரியதோர் கணக்கு
தமிழராய் பிறந்திட்ட
அனைவருக்குமே
கணக்கை சரியாய்க்
கழித்திடும் பங்குண்டு !
தாய் நிலத்தினில் வாழ்பவர்
தம்மையே கொடுக்கிறார்
புலத்திலே வாழும்
நாமென்ன கொடுக்கலாம்
கூனிக் குறுகிக்
குனிந்து நெளிந்து
வாழ்கின்ற வாழ்விலே
யாதென்ன கண்டோம் !
அச்சமற்ற வாழ்வொன்று
முன்னைய நாட்களில்
இருந்தது உண்மை
இன்றைய நாட்களில்
இங்கும் மெதுவாய்
இனவாதம் வளருது
என்று வெடிக்குமோ
எப்படி வெடிக்குமோ
யாரறிவாரோ
புலம் பெயர் உறவே
எங்களை அவர்கள்
அடித்துக் கலைக்குமுன்
நாங்களாகப் போய்விடல்
நன்றிலும் நன்றே !
நாங்களங்கு
போகும் போதிலே
நிமிர்ந்து போகும்
நிலையொன்று வேண்டும்
நிலையொன்றைக் காண
எம் நாடங்கு வேண்டும்
நாடுகாத்திடும்
பங்கினைச்செய்தே
நாமும் நிமிர்வோம்
தமிழனாக !
கல்வியைப் பறித்தார்
நூலகம் எரித்தார்
தமிழினம் போற்றும்
தன்மானம் தன்னை
எரிக்கவும் அழிக்கவும்
இவர்களால் முடியுமா !
இழிநிலையோடு
வாழ்ந்திடும் நிலையை
இவ்வுலகினில் தமிழன்
தாங்கிடல் முறையோ !

செஞ்சோலை சிறுவர் இல்லம் மீதான ஸ்ரீலங்கா அரசின் விமான தாக்குதல் 14-08-2006





தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14' ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது... அழுது... ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும்.

முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கன்னி 10-05-1973 - 16-08-1994




முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கன்னி

10-05-1973 - 16-08-1994

கடலன்னையின் பெண் குழந்தை

கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கன்னியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. "உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்" தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.

இலங்கை அரசினால் அழிக்கப்பட்ட ஒரு அழகிய சம்பூர் தமிழ் கிராமத்தின் உண்மைக் கதை

 
இலங்கை அரசினால் அழிக்கப்பட்ட ஒரு அழகிய சம்பூர் தமிழ் கிராமத்தின் உண்மைக் கதை

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு பாரம்பரிய தமிழ்க்கிராமமே சம்பூராகும். அனைத்து விதமான வளங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தமையினாலேயே சம்பூரணம் என்னும் பெயர் மருவி சம்பூர் என ஆகியதாக முன்னோர்கள் கூறுகின்றனர்.
சம்பூரின் அமைவிடமும் குடித்தொகையும்
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு பாரம்பரிய தமிழ்க்கிராமமே சம்பூராகும். அனைத்து விதமான வளங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தமையினாலேயே சம்பூரணம் என்னும் பெயர் மருவி சம்பூர் என ஆகியதாக முன்னோர்கள் கூறுகின்றனர். இப்பெயர் இலங்கை அரசினால் தற்போது உயர் பாதுகாப்பு வலயம் என பிரகடனம் செய்யப்பட்ட சம்பூர் பிரதேசத்தில் சம்பூர், கடற்கரைச்சேனை, கூனித்தீவு, சூடைக்குடா மற்றும் இளக்கந்தை ஆகிய ஐந்து பாரம்பரிய தமிழ்க்கிராமங்கள் அடங்குகின்றன. மூதூர் பிரதேச செயலகத்தின் 2008 ஆம் ஆண்டுக் கணக்கீட்டின்படி இப்பிரதேசத்தில் 1940 குடும்பங்களைச்சேர்ந்த 7494 பேர் வாழ்ந்து வந்தனர்.

இனப்பிரச்சினையும் சம்பூரும்

மூதூர் அக்சன்பார்ம் பணியாளர்கள் படுகொலை04/08/2006

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட்
மாதம் 4 ஆம் நாள் பாரிசைத்
தலைமையகமாகக் கொண்டுள்ள
பட்டினிக்கு எதிரான
அமைப்பு Action Contre La
Faim (ACF) என்ற மனிதாபிமான
அமைப்பின் 17 உள்ளுர்
பணியாளர்கள் மூதூரில் உள்ள
அவர்களின் அலுவலகத்தில்

இன்று 04-08-1987 தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம் நிகழ்ந்த நாள்



தமிழீழ மக்களின் விரோதத்தைச் சம்பாதித்த ராஜீவ் - ஜேஆர் ஒப்பந்தம் 29-07-1987 அன்று கைச்சாத்திடப்பட்டது . இதன் புறக்காரணிகளை விளக்கும் விதமாக 04-08-1987 சுதுமலை பிரகடன கூட்டம் வாயிலாக முதல் முதலாக மக்களை நேரடியாக சந்தித்து வரலாற்று முன்வைக்றார்

இன்று  04-08-1987  தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம் நிகழ்ந்த நாள்

♥ ஈழத்துப்பாடகன் மேஜர் சிட்டு 14 'ம் ஆண்டு வீர காவிய நாள்

ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner