-->

விடுதலைப்புலிகள் இதழ் 138
















Share

23ம் ஆண்டு நினைவலைகள்

1987
செப்டெம்பர் 15
அன்று திலீபன்
தனது உண்ணா நோன்
பினை ஆரம்ப
ித்து நீர
ாகாரம் கூட
அருந்தாது 12
நாட்கள்
பட்டினி கிடந்த
ு அவனது க
ோரிக்கைகளை (க
ாந்தி உண்ணா நோ
ன்பிருந்து ப
ெற்றுக்
கொடுத்ததாக
சொல்லப்படும் )
இந்திய
அரசு செவி சாய்க
்காத நிலையில்
செப்டெம்பர் 26
சாவினைத்
தழுவிக்
கொண்டான்.
திலீபன்
வெள்ளையனே வெளி
யேறு என்பது போல
இந்தியனே வெளிய
ேறு என
ஒரு போதும்
கேட்டதில்லை.
எதற்காக
ஈழத்திற்கு வந்
தீர்களோ ? என்ன
உறுதிமொழிகளை
தந்தீர்களோ அவற
்றை அமுல்ப்
படுத்துங்கள்
என்று மட்டுமே க
ேட்டான் . பசி
மறந்து கிடந்த
பிள்ளையின்
போருக்கு பாரதம
் சாவினைப்
பரிசளித்துப்
பல்லிளித்தது .
திலிபன்
நினைவுகள்
தியாகி திலீபன்
உலக
வரலாற்றிலே ஓர்
புதிய
அத்தியாயத்தின
் ஆரம்பம்
மட்டுமல்ல ...
தமிழீழ மக்கள்
புரட்சியின்
திறவுகோல் . ஈழ
விடுதலைப்
போராட்டத்தின
் அகிம்சைத் தீ .
அணையா
விளக்கு,
அகிம்சையால்
எழுந்த
பாரதமெனும்
நாட்டுக்கு ,
அகிம்சையின்
அர்த்தம்
கற்பித்த
புலிவீரன் .இந்த
ிய-
சிறீலங்கா ஒப்ப
ந்தமெனும்
சூழ்ச்சிப்
பொறியோடு ,
தமிழீழ
மக்களின்
துன்பங்களையும
் ,
வேதனைகளையும்
வெட்டி
வீழ்த்தி விடுவ
ோமென்று
கூறிக்கொண்டு
பாரதப் படைகள்
எம் மண்ணில்
காலூன்றியபோத
ு தமிழீழ
மக்களின்
மகிழ்ச்சி உச்ச
ிமேவிப்
பிரவாகித்தது.
ஆனால்
இந்திய அரசின்
கபடம் மெல்ல
மெல்ல வெளிவரத்
தொடங்கியபோத
ு ஐந்து அம்சக்
கோரிக்கைகளை ம
ுன்வைத்து பன்
னிருநாட்கள்
தண்ணீருமின்றி
உண்ணாநோன்பிர
ுந்த
தமிழீழ
விடிவிற்காய்
உயிர்த்தியாகம
் செய்தான்
தியாகி திலீபன்
.1963.11.27
இல்
ஊரேழு என்னும்
கிராமத்தில்
பிறந்த
இராசையா பார்த்
தீபன் என்னும்
திலீபன்
கல்வியில்
சிறந்துவிளங்க
ி பல்கலைக்கழக
மருத்துவபீட
அனுமதியைப்
பெற்றான்.
தமிழீழ
மக்களின்
இன்னல்கண்டு தன
து கல்வியை உத
றித்தள்ளி
1983 காலப்
பகுதியில்
லெப் . கேணல்
பொன்னம்மான்
அவர்களின்
தொடர்பு மூலமா

தன்னை விடுதலைப
் புலிகள்
அமைப்பில்
இணைத்துக்
கொண்டான்.
ஆரம்ப
காலங்களில்
இயக்க அரசியல்
வேலைகளில்
ஈடுபட்ட
திலீபன் ,
பின்னர் யாழ்.
மாவட்ட அரசியல்
துறைப்
பொறுப்பாளராக
நியமிக்கப்பட்
டான் .
இக்காலப்பகுதி
யில்
சிறீலங்காப்
படைகளுடனான
நேரடி மோதல்கள
ிலும்
தனது திறமையினை
வெளிப்படுத்தி
வந்தார் .
மக்கள்
மத்தியில் மிக
அன்பாகப்
பழகியதுடன்
அவர்களது
முன்னேற்றத்து
க்காக பல
அமைப்புகளையும
் நிறுவினான் .
விடுதலைப்
புலிகள்
அமைப்பையும் பல
புதிய
பரிணாமங்களிற்
கு இட்டுச்
செல்ல
வழிவகுத்துச்
செயற்பட்டார்.
களத்தில்,
சுதந்திரப்
பறவைகள் உட்பட
பல
பத்திரிகைகளை
ஆரம்பித்து செய
ற்படுத்தினான் .
விடுதலைப்
புலிகளின்
மாணவர்
அமைப்பு ,
மகளிர்
அமைப்பு,
சுதந்திர
பறவைகள்
அமைப்பு , தேச
பக்தர்
அமைப்பு என்பவற
்றுடன்
தமிழீழ கிராமிய
நீதி மன்றங்கள்
, விழிப்புக்
குழுக்கள்,
சர்வதேச
உற்பத்திக்
குழுக்கள் ,
தமிழீழ
ஒலி ஒளி சேவைக்
கட்டுப்பாட்டு
ச் சபை , தமிழர்
கலாசார அவை
என இவன்
ஆரம்பித்து நெற
ிப்படுத்திய
பலவற்றைஅடுக்க
ிக்கொண்டே போ
கலாம்.
இவ்வாறு விடுதல
ைக்காய்
தீவிரமாய்
உழைத்துவந்த
லெப் . கேணல்
திலீபன்
இந்திய -
சிறீலங்கா ஒப்ப
ந்தத்தை சி
றீலங்கா அரசு
மீறுவது கண்டு ,
பயங்கரவாதத்
தடைச்சட்டத்தி
ன் கீழ்
தடுப்புக்
காவலிலும் ,
சிறைகளிலும்
உள்ளோர்
விடுவிக்கப்பட
வேண்டும் ,
புனர்வாழ்வு என
்னும் பெயரில்
தமிழர்
தாயகத்தில்
நடாத்தப்படும்
சிங்களக்
குடியேற்றங்கள
் உடனடியாக
நிறுத்தப்பட
வேண்டும் ,
இடைக்கால
அரசு நிறுவப்பட
ும்
வரை 'புனர்வாழ்
வு' என்னும் சகல
வேலைகளையும்
நிறுத்த
வேண்டும்.
வடக்கு கிழக்கி
ல் காவல்
நிலையங்கள்
திறக்கப்படுவத

நிறுத்தப்பட
வேண்டும்.
இந்திய
அமைதிப்படையின

மேற்பார்வையில
் உள்ள
ஊர்காவற்
படையினரின்
ஆயுதங்கள்
திரும்பப்
பெறப்பட்டு தமி
ழ்க்
கிராமங்கள் ,
பள்ளிக்கூடங்க
ள் என்பவற்றில்
குடியிருக்கும
் இராணுவ
பொலீஸ்
நிலையங்கள்
அகற்றப்பட
வேண்டும் என
ஐந்து கோரிக்க
ைகளை ம
ுன்வைத்து பல்
லாயிரக்
கணக்கான
மக்கள் திரள்
முன்
தண்ணீருமின்றி
தன்
பட்டினிப்போர
ாட்டத்தை ஆரம்ப
ித்தான்
திலீபன் .
பன்னிரு நாட்கள
் தன்பாராமுகத்
தன்மையினால்
திலீபன்
என்னும் தியாக
வீரனை சாவின்
வாய்க்குத்
தீனியாக்கியது
பாரத அரசு .
'மக்கள்
புரட்சி வெடிக்
கட்டும் ,
சுதந்திர
தமிழீழம்
மலரட்டும்'

தியாகதீபம் திலீபன் <முழுமையான தொகுப்பு

    தமிழ் மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் உரிமைகளைக் காப்பாற்றும் வகையில், இந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் (15.09. 1987) தொடங்கினார். அவரது ஐந்து கோரிக்கைகள்தான் என்ன? 1. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும். 2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களவர் குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை " புனர்வாழ்வு' என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும். 4. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் போலீஸ் நிலையங்கள் திறப்பதை உடனே நிறுத்தவேண்டும். 5. இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோர்க்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் திரும்பப்பெற்று, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும். ஆகிய கோரிக்கைகளை உண்ணாவிரத மேடையில் பிரசாத் படிக்க, இதே கோரிக்கைகளை 13-08-1987 அன்று இந்தியத் தூதர் அலுவலகத்திற்கு அனுப்பி 24 மணிநேரம் ஆன நிலையில், தகுந்த தீர்வு கிடைக்காத காரணத்தால், சாகும்வரை உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த விடுதலைப் புலிகள் பிரதேசப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ( 13-08-1987) தீர்மானிக்கப்பட்டது. பிரபாகரனும் நிலைமையை விளக்கி தீட்சித்துக்குக் கடிதம் எழுதினார். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயிலையொட்டி உண்ணாவிரத மேடை அமைக்கப்பட்டிருந்தது. தாயற்ற திலீபனுக்கு நடுங்கும் கரத்துடன் வந்த ஒரு தாய், திருநீற்றைப் பூசினார். மாத்தையா திலீபனை உண்ணாவிரத மேடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார். அவர் அருகே மு.வ.யோ.வாஞ்சிநாதன், ராஜன், பிரசாத், சிறீ ஆகியோர் அமர்ந்தனர். திலீபனின் இயற்பெயர் இராசையா பார்த்திபன் ஆகும். யாழ் மாவட்டத்திலுள்ள ஊரெழு என்னும் பனைமரங்கள் நிறைந்த கிராமத்தில், ஆசிரியர் இராசையா தம்பதியினருக்கு நாலாவது கடைக்குட்டி மகனாகப் பிறந்தார். மருத்துவ மாணவனாக இருக்கையில் பிரபாகரனைத் தலைவராக ஏற்று இயக்கத்தில் சேர்ந்தார். இவரது பணியில் திருப்தியுற்ற தளபதி கிட்டு பல்வேறு உயர்வுகளை அளித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக, கிட்டுவின் பரிந்துரையின்படி பிரபாகரன் நியமித்தார். திலீபனின் முயற்சியால் விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் துணை அமைப்புகளாக (1) தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் இயக்கம் (SOLT) , (2) தமிழீழ மகளிர் அமைப்பு, (3) சுதந்திரப் பறவைகள் அமைப்பு. (4) தமிழீழ தேசபக்தர் அமைப்பு, (5) தமிழீழ விழிப்புக் குழுக்கள், (6) தமிழீழக் கிராமிய நீதிமன்றங்கள், (7) சுதேச உற்பத்திக் குழுக்கள், (8) தமிழீழ ஒலி-ஒளி சேவைக் கட்டுப்பாட்டுச் சபை, (9) தமிழர் கலாசார சபை மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு பெரும் பாராட்டைப் பெற்றன. அண்ணல் காந்தி, ஐரிஷ் நாட்டுப் போராட்ட வீரன் பாபி சாண்ட்ஸ், பொட்டி ஸ்ரீராமலு போன்றோர் நீராகாரம் அருந்தித்தான் உண்ணாவிரதம் இருந்ததாகப் படித்திருக்கிறோம். ஆனால் திலீபன் ஒரு சொட்டு நீர்கூட அருந்தாத உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன், தகவல் தொடர்பு சாதனங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் உண்ணாவிரதம் இருந்தபோது ஒரு சொட்டு நீர்கூட அருந்தாத உண்ணாவிரதத்தையே மேற்கொண்டார். அவர் வழியில் திலீபன். பக்கத்தில் இருந்த மேடையில் பிரசாத் தலைமை ஏற்க, உண்ணாவிரதத்துக்கான காரணங்களை நடேசன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் விளக்கினார்கள். மேடையில் ஓர் இளைஞன், "திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல - தமிழ்மக்களின் ஒட்டுமொத்தமான கோரிக்கை இது. தமிழீழம் தாருங்கள் என்றுகூடக் கேட்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்றுதான் அவர் கேட்கிறார்' என்று பேசினார். அன்று இரவு பதினோரு மணியளவில் பிரபாகரன், திலீபனைப் பார்ப்பதற்காக வந்தார். அவருடன், சொர்ணம், இம்ரான், அஜீத், சங்கர், மாத்தையா, ஜானி என்று பலரும் வந்திருந்தனர். முதல் நாள்: இரவு நாடித் துடிப்பு 88, சுவாசத் துடிப்பு 20. இரண்டாம் நாள்: முகம் கழுவிக்கொண்டார்; தலைவாரிக் கொண்டார்; சிறுநீர் கழித்தார்; மலம் போகவில்லை. மேடையில் கவிதைகள் முழங்கிக்கொண்டிருந்ததைக் கேட்ட திலீபன், "பேசவேண்டும் போலிருக்கிறது. மைக் தாருங்கள்' என்றார். இரண்டு நிமிடத்துக்கு மேல் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு மைக் வழங்கப்பட்டது. ""அன்பார்ந்த மக்களே! என்னால் அதிகம் பேசமுடியாது. ஆனாலும் உங்களுடன் பேசவேண்டும் போல் இருக்கிறது. உங்களைப் பார்க்கும்போது, நீங்கள் தரும் ஆதரவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறேன். எனது ஐந்து கோரிக்கைகளும் நிறைவேறும் மட்டும் ஒரு சொட்டு நீர்கூட அருந்த மாட்டேன். இது உறுதி. இதையே தலைவர் பிரபாகரனிடமும் வலியுறுத்திக் கூறிவிட்டேன். இறக்க நேரிட்டால், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். நான் இறந்ததும் விண்ணில் இருந்து அங்கேயுள்ள என் நண்பர்களுடன் சேர்ந்து தமிழீழம் மலரப்போகும் அந்தநாளை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன். என்னால் அதிகம் பேசமுடியவில்லை. என் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் உங்களுக்கு என் நன்றிகள். வணக்கம்'' அவரது பேச்சைக் கேட்ட மக்கள் கண்ணீர் சிந்தினர். அன்று இரவும் பிரபாகரன் வந்தார். மூன்றாம் நாள்: "மலம் போகவேணும் போலதான் இருக்கு' என்றார் திலீபன். "இறங்கி வாருங்கள்' - உதவுகிறார் டாக்டர் வாஞ்சிநாதன். " வேண்டாம் விடுங்க... நானே வருகிறேன்.' சிறுநீர் கழியவில்லை...சிரமப்படுகிறார். "தண்ணீர்-குளுக்கோஸ் ஏதும் குடித்தால்தான் சிறுநீர் வரும்' என்கிறார் டாக்டர். "என்ன பகிடியா பண்ணுறீங்க - சொட்டுத் தண்ணீர்கூட குடிக்கமாட்டேன்' என்றார் திலீபன் உறுதியோடு. ஒலிபெருக்கியில் காசி ஆனந்தன் கவிதைகள் முழக்கமிட்டுக் கொண்டிருந்தது. 3- ஆம் நாள் நாடித்துடிப்பு 110. சுவாசத் துடிப்பு 24.
நான்காம் நாள்: நாடித்துடிப்பு 120. சுவாசத் துடிப்பு 24. நாடித்துடிப்பு சாதாரணமாக 72-80-ம், சுவாசத் துடிப்பு 16-22- ம் இருக்கவேண்டும். அதே நாள் இரவில் நாடித்துடிப்பு 114. சுவாசத்துடிப்பு 25. 1986- இல் நடைபெற்ற ஒரு மோதலில் எதிரியின் குண்டை வயிற்றில் தாங்கியதால் திலீபனின் 14 அங்குலக் குடலை அகற்றிவிட்டார்கள். அப்போது மூன்று மாதம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அந்தக் காரணமும் இப்போது சேர்ந்து அவருக்கு வயிற்றில் வலி எழுந்தது. ஐந்தாம் நாள் - ஆறாம் நாள்: கொழும்பிலிருந்து இந்தியத் தூதுவர் அலுவலகத்தில் இருந்து முக்கிய நபர் வரப்போவதாகச் செய்தி கசிந்தது. கிட்டுவின் தாயார் ராஜலட்சுமி அம்மாள் உண்ணாவிரத மேடைக்கு வந்து, திலீபனை அணைத்து வாழ்த்தும் வேளையில், அவரது அழுகை நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அன்று மாலை யாழ்க்கோட்டை ராணுவ முகாம் பொறுப்பாளர் ஜெனரல் பாரா, திலீபனைப் பார்க்க வந்தார். பிரிகேடியர் ஃபெர்னான்டோ உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து சிங்களக் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தினார். ஆறாம் நாள்: தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜானி ஆகியோர் வந்து திலீபனின் தலையை வருடி கண்கலங்கிச் சென்றனர். "கிட்டு அண்ணனைப் பார்க்கவேண்டும்' திலீபன் கோரிக்கை வைத்தார். அவர் அப்போது சென்னையில் இருந்தார். மாலை, ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்காராவும் அவரது கட்சியினரும் வந்து பார்த்தனர். யாழ்ப்பாணம் வந்த இந்திய உதவித் தூதுவர் நிருபம் சென், முகாமில் புலிகளின் பிரதிநிதிகளிடம், "உண்ணாவிரதப் போராட்டங்களால் இந்தியாவை நிர்ப்பந்திக்க முடியாது' என்று எச்சரித்துவிட்டுச் சென்றார். ஏழாம் நாள்: சென்னையிலிருந்து இந்தியா டுடே பத்திரிகையாளர் மற்றும் சென்னைத் தொலைக்காட்சிக் குழுவினர் வந்தனர்; படம் பிடித்தனர். எட்டாம் நாள்: கூட்டம் லட்சக்கணக்கில் சேர்ந்துவிட்டதால் வெயிலைத் தாக்குப்பிடிக்க கொட்டகை போடும் வேலை நடந்தது. வடக்கு-கிழக்குப் பகுதிகளில் பல இடங்களில் திலீபனின் உண்ணாவிரதத்தை ஆதரித்து, அடையாள உண்ணாவிரதங்கள் மேற்கொள்ளப்பட்டன. ரத்த அழுத்தம் 80/50. நாடித் துடிப்பு 140. சுவாசம் 24. இந்திய அமைதிப்படையினர் விடுதலைப் புலிகளைச் சந்தித்தனர். இவர்கள் சிங்களப் போலீசாருக்குப் பதில் இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படையைக் கொண்டு வருவது குறித்து பேசிச் சென்றார்கள். உண்ணாவிரதம் குறித்து எதுவும் பேசவில்லை. ஒன்பதாம் நாள்: இந்திய அமைதிப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் ஹெலிகாப்டரில் யாழ் பல்கலை மைதானம் வந்தார். பிரபாகரனைச் சந்தித்தார். இருவரும் தனித்தனி வாகனங்களில் புறப்பட்டு யாழ்கோட்டை ராணுவ முகாம் சென்றனர். பேச்சுவார்த்தையில் பலன் எதுவுமில்லை. தொடர்ந்து அதே நாளில் பிற்பகல் 1.30 மணிக்கு, இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் பிரபாகரன் சந்திப்பு நடந்தது. பேச்சுவார்த்தையில் தீபிந்தர் சிங், ஹர்கிரத் சிங், பிரிகேடியர் ஃபெர்னாண்டஸ், கேப்டன் குப்தா மற்றும் புலிகள் தரப்பில் மாத்தையா, செ. கோடீஸ்வரன் (வழக்கறிஞர்), அன்டன் பாலசிங்கம், சிவானந்த சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் தூதர் உறுதிமொழி மட்டுமே அளித்தார். உண்ணாவிரதம் நிறுத்தப்படுவது குறித்து ஏதும் பேசவில்லை. பத்தாம் நாள்: திலீபனின் கை, கால்கள் அசைவின்றி சோர்ந்து கிடந்தன. நாடித்துடிப்பு 52. ரத்த அழுத்தம் 80/50. சராசரி மனிதனின் அளவுகளைவிட அனைத்தும் குறைந்துவிட்டன. இனி, திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நேரலாம். நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாட்டுத் தூதுவர்கள் வந்து திலீபனைப் பார்த்துச் சென்றார்கள். பதினோராம் நாள்: கோமாவுக்கு முந்தைய நிலையில் உடல் அங்குமிங்கும் அசைவது போல திலீபனின் உடல் அவரையறியாமலே புரளத் தொடங்கியது. யாழ் மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்தன. "நிதர்சனம் டிவி' கடந்த பத்து நாட்களாக உண்ணாவிரதச் செய்தியைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தது. பன்னிரண்டாம் நாளில், திலீபனின் உடல்நிலை மோசமாகிவிட்டது என்ற செய்தி யாழ் பகுதி முழுவதும் பரவியது. 265 மணி நேரம், நீரின்றி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி, தனது சுயநினைவு தப்பினாலும் குளுக்கோஸ், நீர் தந்துவிடாதீர்கள் என்று கூடியிருந்தோரிடம் சத்தியவாக்கு வாங்கிக்கொண்டு புழுவாய்த் துடித்த திலீபனின் உயிர் 26-09-1987 காலை 10. 48 மணிக்குப் பிரிந்தது. எங்கும் அழுகை.. . விம்மல்... இலங்கை இந்தியா எதிர்ப்புக் குரல் எழுந்தது. எம்பார்ம் செய்ய மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட உடல், பிற்பகல் 4.15 மணியளவில் மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஈரோஸ் தலைவர் பாலகுமார், பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதனர். பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மனிதநேயம் தழைக்கும் இடத்தில்தான் அகிம்சை வெல்லும் என்பது திலீபன் மரணம் மூலம் உலகுக்கு உணர்த்தப்பட்டது. மேலும்

ஊரெழு தியாகி திலீபனின் தாய்மண்

பழமையையும் , , வளங்களையும் வனப்புகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஊரெழு கிராமம் மாவீரன் தியாகி திலீபனைப் பெற்றமையால் , தமிழீழ வரலாற்றில் தனித்தன்மையையும் தனியோர் இடத்தையும் ; பெற்றுள்ளது வலிகாமம் கிழக்கில் அமைந்துள்ள இந்தக் கிராமத்திற்கு ஊரெழு என்ற பெயர் வந்தற்கான பலகாரணங்கள் செவிவழி கதைகளாக மக்கள் மத்தியில் உலா வருகின்றன . 1. இந்த ஊர் தனைச்சூழ ஏழு ஊர்களை அரண்களாகக் கொண்டு ஊரெழு எனப்பெயர் பெற்றுள்ளது . ( ஊர் ஏழு என்பதே ஊரேழு மருவி ஊரெழுவானது என்பர் .) கிழக்கில் நீர்வேலியும் தென்பகுதியில் உரும்பிராயும் , மருதனார்மடமும் மேற்கோரமாகச் சுன்னாகம் , வடக்கே ஏழாலை , புன்னாலைக்கட்டுவன் வட கிழக்கில் அச்செழுவும் ஊரெழுவுடன் உறவாடி நிற்கின்றன . 2. முன்னொரு காலத்தில் ஊர்களில் ஏற்பட்ட இயற்கை அழிவுகளால் , வேற்றூர் மக்கள் இடம் பெயர்ந்து வந்து இவ்வூர் p ல் தங்கினராம் . ஊர் எழுந்து வந்தமையால் ஊரெழு என அழைக்கப்பட்டது எனவும் ; கூறுவர் . 3. எப்பொழுதுமே இவ்வூர் எழுச்சியுள்ள ஊராக விளங்கியதால் ஊரெழு என மருவியதாகவும் கூறுவோர் உளர் . 4. எங் ; கு என்ன சிக்கல்கள் தோன்றினாலும் , அவற்றை இவ்வூரே எழுந்து வந்துமுன்னின்று அச்சிக்கல்களைமுகங்கொடுத்துத் தீர்த்து வைப்பதனால் , ஊரெழு எனப் பெயர் வந்தது எனக் கூறுவோரும் உளர் . எவை எப்படியிருப்பினும் மேற்கூறப்பட்ட ஒவ்வொரு காரணங்களும் இன்று ஊரெழு என்ற பெயருடன் பொருந்தி வருவதால் , உண்மைகள் போலவே காட்சியளிக்கின்றன . ஊர் அமைவிடம் : யாழ் நகரத்திலிருந்து 6 கி . மீ . தொலைவில் அமைந்துள்ள ஊரெழுக் கிராமத்தைப் பலாலி வீதி ஊடறுத்துச் செல்கின்றது . இவ்வீதி ஊரெழுவைக் கிழக்கு , மேற்கு என இருபெரும் பிரிவுகளாகப் பிரித்து நிற்கின்றது . வடக்கெல்லையில் சாவகச்சேரி - சங்கானை வீதியையும் , மத்தியில் கிழக்கு - மேற்காக , ராஜ வீதியையும் சுன்னாகத்தையும் இணைக்கும் ஒரு வீதியும் அமைந்துள்ளன . ஏறத்தாழ 4 சதுரமைல் நிலப்பரப்பைக் கொண்ட இப்பிரதேசத்தில் 3074 மக்கள் அதாவது 824 குடும்பங்கள் தற்பொழுது வசிக்கின்றனர் . பண்பட்ட செந்நிலமும் வற்றாத நீரூற்றும் என்றும் மக்களுக்கு மன அமைதியைத் தரும் பெரும்வளங்களாக இயற்கை வாரி வழங்கியுள்ளது .   ஊரெழுவில்அதிசயமும் , அற்புதமுமாக விளங்குவது பொக்கணை எனும் வற்றா நீரூற்றாகும் . இதை " யாமா " என்றும் அழைப்பர் . இந்நீரூற்றுக்குப் பல வகையான விளக்கங்களைப் பலரும் வழங்குவர் . இவ்விடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் , இ , டி விழுந்திருக்கலாம் என்றும் அதனால் ஏற்பட்ட குன்றே இவ் வற்றா நீரூற்றாக இருக்கலாம் என அறிவியலாளர் ; விளக்குகின்றனர் . ஊரெழு பழம்பெரும் கிராமம் என்பதற்குச் சான்றாகக் கர்ணபரம்பரைக் கதையோடு தொடர்புபடுத்திப் பொக்கணை ஊற்றுக்கு விளக்கம் கூறுவோரும் உளர் . இராமர் சீதையைத் தேடிப் படைகளுடன் , இலங்கைக்கு வந்திருந்த போது , தண்ணீர்த் தாகம் எடுத்தமையால் , இராமர் தனது அம்பை பூமிமேல் எய்து நீர் ஊற்றை உருவாக்கித் தமது தண்ணீர்த் தாகத்தினைத் தணித்த இடமே இன்னும் வற்றா ஊற்றாக விளங்கும் " பொக்கணை யாமா " என்பது வாய் ; மொழியாகக் கூறப்பட்டு வரும் கதையாகும் . இந்நீர் ஊற்றுக்கு அருகில் இருக்கும் கற்பாறை ஒன்றில் முழங்கால் அடையாளம் போன்று குழிகள் இருப்பது மேலும் இக்கதைக்கும் ; மக்களின் நம்பிக்கைக்கும்வலுச்சேர்ப்பதாய் அமைந்துள்ளது . ஊரெழுக் கிராமத்தில் , நீர் வளம் மட்டுமல்ல நிலவளமும் அவ்வூர் மக்களுக்கு இயற்கையாக அமைந்த ஒன்றாகும் . இங்கு வாழும் மக்கள் தம் நிலத்தைப் " பொன் விளையும் பூமி " என கூறுவர் . எத்தகைய பயிரைச் செய்தாலும் ஊரெழு செம்மண்ணில் அப்பயிர்கள் செழிப்புடன் விளைவதும் , வளர்வதும் அவ்வூர் மண்ணின் சிறப்புத் தன்மையாகும் . உருளைக்கிழங்கு , புகையிலை , வெங்காயம் , வாழை , கோவா , வெற்றிலை , பீற்றுட் , மரவள்ளி , கறணை , கத்தரி , முந்திரிகை , லீக்ஸ் , மிளகாய் , கரட் , இராசவள்ளி , பயிற்றை போன்ற பயிர்கள் இம்மண்ணில் செழிப்பாக வளர்கின்றன , ஊரெழுவில் இயற்கையாக அமைந்த வளங்களில் பனையும் ஒன்று . ஊரெழு மேற்கில் பனைமரங்கள் அடர்த்தியாகக் காணப்படுகின்றன . ஊரெழுக்கிராமத்தில் , பெரும் சக்திமிக்கத் தெய்வங்களும் விரும்பிக் குடிகொண்டு மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றன . பலாலி வீதியில் வீரகத்தி வினாயகர் கோவிலும் , பர்வதபத்தினி அம்மன் கோவிலும் , மேற்குப்பக்கமாகக் கண்ணகி அம்மன் கோவிலும் , உரும்பிராய் - ஊரெழு எல்லையுடன் காட்டு வைரவர் கோவிலும் ஊரெழுக்கிழக்கிற் கேணியடி வைரவர் கோவிலும் பழமைமிக்கப் பெருமைமிக்கத் தலங்களாகும் . இவற்றுள் காட்டு வைரவர் கோவில் , கண்ணகி அம்மன் கோவில் மற்றும் பர்வதபத்தினி அம்மன் கோவில் ஆகியன வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களாகும் . இத்தகை அழகிய ஊரெழுக் கிராமம் இன்று போரால் உருக்குலைந்து காட்சியளிக்கின்றது . நாட்டுப்பற்றும் , ஊர்ப்பற்றும் கொண்ட மக்கள் மறுபடியும் ஊரெழுவை மேம்படுத்தும் நோக்குடன் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் செயற்படுத்தி வருகின்றனர் .  

அகிம்சை எனும் அகல் விளக்கின் அடியும் முடியும் இவனே

அழைத்தவர் குரலுக்கும் அழையாதோர் அகல்வுக்கும் வலை வீசும் வானவர் தூதனே அழைத்தவன் தியாகி திலீபன் என அறிந்து ஆயிரத்திதொளாயிரத்தி எண்பத்தேளில் செப்டம்பர் இருபத்தாறன்று சுயநலப் பிரியனாய் வந்தவன் நீ... நீயும் அறிவாய் இந்த உலகும் அறியும் அகிம்சையின் தாத்தன் மகாத்மா என்றால் மாசில்லா மகாத்மா தமிழீழத் திலீபன் என்றே உண்ணாமல் உறங்காமல் ஒருதுளி நீரும் அருந்தாமல் இறவாமல் பிறவாமல் எமதீழ விடிவெள்ளியாய் வாழ்கிறான் . தமிழீழப் பார்த்திபன். கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை – ஓர் ஏழையின் பசிக்கே அன்று தந்தான் அம்பிகைபிரியன் ஆதிசங்கரன். துவண்டு துடித்த கொடிமுல்லைக்கே தன் தேர் தந்து வள்ளலானான் மன்னன் பாரி. கார்முகில் கண்ட கோலமயில் மழையில் தோகை விரித்தாடி கூதலால் குறுகிநிற்க தன் போர்வை கொடுத்து மயிலின் கூதல் களைந்தார் அடியவர் மேகனார். கொடுத்தவர் வரிசையில் வள்ளலென கண்டேன் கர்ணனையும் – அவனும் ஒருத்தனக்காகவே கொடுத்தான் தன்னுயிரை . ஈழப்போரின் பார்த்திபனுக்கு ஈடுல்லா இவரெல்லாம் இலக்கியத்தில் வளிக்குத் துணையென வாய் மொழிய நாணிச் சிவக்கின்றன கண்கள் ஒருத்தனுக்கா கொடுத்தான் திலீபன் தன்னுயிரை உலகத் தமிழனுக்காகவே கொடுத்தான். தமிழீழ மலர்வுக்காகவே கொடுத்தான். மெழுகுவர்த்தி யென இவனைச் சொல்ல ஐயப்படுகிறது என் மனசு தானே .. தனியே.. தன்னை உருக்கும் தவத்தில் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி நெய்யென உயிரையும் ஊற்றி ஊற்றி பன்னிரு நாட்களாய் பார்த்திபன் வளர்த்த வேள்விக்குள் காந்தி நாட்டின் அராயகத் தாண்டவங்கள் உலைக்களமதில் நீறு பூத்துக்கொதித்திட அகிலமே கண்டு சிலிர்த்தது. அமைதிப்படையென முலாம்தனை பூசி அராயகத் தேரேறி விரகம் தீத்தவரே கடிதெனக்கண்ட காந்தியக்கொள் கையை நிர்மூலமாக்கிய நிர்மலன் திலீபனே அரியணையாளும் ஆதிக்க உலகில் மூவடி நடந்து தமிழீழத்தடம் பதித்த வாமணனும் இவனே. அகிம்சையெனும் அகல் விழக்கின் அடியும் முடியும் இவனே இன்றுள்ளேன் நாளையிருப்பேனோ நானறியேன் என நல்லூரான் வீதியிலே நமதீழ விடிவிற்கு நல் லுரை பயின்றவன் போர்முறை நிறுத்தி அறவளி நின்று அனலையும் தின்றவன். இறவா வரத்தில் இரண்டறக் கலந்தபின் இந்திய ஆதிக்க இரணியகாண்டத்துக்குள் இறந்து போவானோ காலனே கண்ணுக்கு தெரியா மாயனே முடிந்தால் முன்னுக்கு வா. இருபத்திமூன்றாண்டுகள் இழையோடிக்கழிந்தாலும் இறவாமல் பிறவாமல் என்றும் பதினாறாய் வாழ்கிறான் எங்கள் தமிழீழக் குமரன் திலீபன். அழைத்தது சாவையா – இல்லை திலீபனை அழைத்தது சாவா நிழலையும் களையும் நிர்மலனே நீயே நியம்தனை சொல். . மீள்பதிவு

தியாகதீபத்தின் இதயம் உருக்கும் கதைகேளு

எடுக்கத்
துணிந்த
வரலாறு -
திலீபனை
மறந்து தொலைத்தால்
பெரும்பாடு .

இதயம்
உருக்கும்
கதை கேளு -
திலீபன்
இறந்து படைத்த
உணர்வோடு !
இருபத்திநான்கு வருட
-
வாழ்க்கையடா
பன்னிரண்டு நாள்
- விரதமடா
உயிரை வெல்லக்
கொடுத்த வீரனடா
அஹிம்சைக்கு அர்த்தம்
தந்த -
தியாகியடா!

முடுக்குமூளை உணர்வெல்லாம்
- திலீபன் -
மூளைமுடுக்கு உணர்வெல்லாம்
-
விடுதலை உணர்வை
கொடுத்த
யோகியடா .
தன் -
உயிரை கொடுத்து
ஈழம் படைக்க -
அவன்
இறந்தே உரைத்த
ஆணையடா !

உலகம் -
திரும்பிப்
பார்த்த
தமிழனடா
வீரம் -
செறிந்துக்
கிடந்த
இளைஞனடா
திலீபன்
மட்டும்
இருந்திருந்தால்
-
இன்று
திலீபன்
மட்டும்
இருந்திருந்தால்
-
ஈழம்
என்றோ கிடைத்த
செய்தியடா !

எழுந்து வீர
நடை போடு ..
விடுதலை கிடைக்காவிட்டால்
-
சமர் போடு ..
தமிழர்
செங்குருதி பாயும்
-
இடமெல்லாம் ;
தமிழர்
செங்குருதி பாயும்
-
இடமெல்லாம் ;
ஈழம் பிறக்கும்
வரைக்கும் -
போராடு!

அன்றைய -
ஐந்து கட்டளை
போதாது ;
அண்ணலை நினைவு கூர்ந்தால்
அடங்காது ;
ஈழம்.. ஈழம்..
கிடைக்கும்
வரை -
திலீபனின்
ஆத்தமா கூட
உறங்காது !!!!


மீள்பதிவு. . . . .

இருபத்து மூன்றாண்டுகள் கடந்தோடிப்போனது. <2010>

இருபத்துமூன்றாண்டுகள்
கடந்தோடிப்போனது
இதயமோ இன்னமும்
கண்ணீரில்
வாடுது
நினைவுகள்
நெஞ்சத்தில்
நேற்றுப் போல்
இருக்குதே
இருபத்துமூன்றாண்டுகள்
இன்றென ஆனதே
தங்கத்
தமிழீழம்
பெற்றெடுத்த
மைந்தனே

பார்த்தீபன் என
நாமம் பெற்ற
எங்கள் திலீபனே
வங்கக் கடல்
தாண்டி வந்து நின்ற
பாரதத்தை
வாய் அடைக்க
வைத்தே போர்
தொடுத்த வீரனே.

பன்னிரு நாட்கள்
நீரின்றி உணவின்றி
அணுவணுவாய்
உனை வதைத்து
உண்ணா நோன்பிருந்தாய்
நேற்றுப்போல்
இருக்கிறதே எல்லா நினைவுகளும்
செந்நீரை சிந்திய
தேசத்தில்
ஒரு ஜீவன்
உண்ணாமல்
நோன்பிருத்தல்
கண்டு
கண்மூடித்
தூங்கிய
காந்தி மகாத்மாவே - உனை
கருணைக்கண்
திறந்து பார்த்திருப்பார்.


திலீபன்
திலீபன் என
திசையெங்கும்
கதற
தீயாய் உன்
தேகம்
நீரின்றிக் காய
கண்கள்
இருண்டு தொண்டை
வரண்டு
கை கால்
சோர்ந்து மெய்
நோவானதாய் .....

குடல்கள்
சுருங்கி உடல்
வலிகண்டு
குற்றுயிராகி ஜீவன்
சுற்றிச்
சுழன்று
கூக்குரல்
எழுப்பி தமிழ்
ஆர்ப்பரித்தெளுந்தும்
கொண்ட
கொள்கையில்
குறியென
இருந்தவன்

காந்தி தேசமே பாரத
பூமியே
நீதிக்கு வழிகாட்டும்
இந்திய
தேசமே
கருணையே வடிவான
காருண்ய தேசமே
உரிமையை பெறத்தானே உண்ணா நோன்பிருந்தான்
பெற்ற
வயிறெல்லாம்
பற்றி எரிந்தது
அனல் கக்கும்
கண்களோடு
கனல்
கக்கி தமிழினம்
புனல்
அருந்தா ஜீவனோடே புரண்டது
மலையான
ஒரு தேகம்
சிலையான போது -
அகிம்சை
மதியாது பாரதம்
தடம்
மாறியே புது விதியானது.

விடுதலையின்
விருட்சமே நீ
வெற்றி கண்டாய்
விலையாக இன்
உயிரை தமிழுக்கு தந்தாய்
கண்ணீரில்
வாடி நாம்
கதி கலங்கி போனாலும்
செந்நீரை ஊற்றி
எம்
தேசத்தை காப்போம்.

இலட்சிய
வேங்கையே கண்மூடித்
தூங்குவாய் -
உன்
கனவுகள்
நனவாகும்
அப்போ கண்
விளித்துப்
பார்ப்பாய் .


மீள்பதிவு

நல்லூர் வீதியில் நடந்தது யாகம்

நல்லூரின் வீதியில் நடந்தது யாகம் -நாலுநாள் ஆனதும் சுருண்டது தேகம்

தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை -திலீபனைப் பாடிட வார்த்தைகள் இல்லை -

பாடும்பறைவகள் வாருங்கள் -புலி வீரன் திலீபனைப் பாடுங்கள் -யாகத்தில்
ஆகுதி ஆனவன் நாமத்தை ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் காலங்கள் பாடுங்கள் -

(பாடும்பறைவகள்……………………..

இந்திய ஆதிக்க ராணுவம் வந்தது , நீதிக்கு சோதனை தந்தது , நாங்கள் சிந்திய
ரத்தங்கள் காய்ந்திடும் முன்னரே கால்களில் வீழ் எனச் சொன்னது ,

வேங்கைகள் இதை தாங்குமா - குண்டை ஏந்திய நெஞ்சுகள் தூங்குமா?

வீரன் திலீபன் வாதாடினான்- பசி தீயில் குதித்து போராடினான்

வாயில் ஒருதுளி நீரதும் இன்றி- வாசலில் பிள்ளை கிடந்தான்

நேரு பேரனின் தூதுவன் ஏனெனக் கேட்காது- ஆணவத்தோடு நடந்தான்- சாவினில்
புலி போனது தமிழீழமே சோகமாய் ஆனது பார்த்து மகிழ்ந்தது- ராணுவம் புலிச்
சாவுக்கு ஆதிக்கம் காரணம்- அன்னிய நாடது ஆயினும் நீயிங்கு ஆதிக்கம்
செய்திட வந்தாய் -

எங்கள் மன்னன் திலீபனின் கோரிக்கை யாவையும் ஏளனம் செய்துமே கொன்றாய்-
துரோகத்தோடு புலி போனது தமிழ் சந்ததியே சூடு கண்டது.

காணொளியில்
http://www.youtube.com/watch?gl=US&warned=True&client=mv-google&hl=en-GB&v=bo7e3URZrX8

தியாகதீபம் ​நிறுத்திப் படித்த நிகரில்லாக் கவிதை

நிறுத்திப் படித்த நிகரில்லாக் கவிதை ! நிறுத்திப் படித்த நிகரில்லாக் கவிதை ! அழகென்றால் என்ன ? உடல் அழகு, கல்வியழகு, கவிதையழகு என்று எத்தனையோ விதமாக அழகுகள் பேசப்படுகின்றன. எல்லா அழகுகளுக்கும் மனிதன் தன் வசதிக்கேற்ப வரைவிலக்கணம் வகுத்திருக்கிறான். அழியும் அழகை நம்பி ஆகா இதுவல்லவோ அழகென்று ஓடி ஏமாறுவோர் உலகில் பலர் உண்டு. ஆனால் அழியா அழகென்று ஒன்றிருக்கிறது. அதுதான் மனிதனை என்றும் உற்சாகமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த அழகை அடையாளம் காணும் உணர்வை இறைவன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒழித்து வைத்திருக்கிறான். மற்றவரின் கருத்துப் பாதிப்பிற்கு உட்படாமல் உண்மையான அழகைக் கண்டு பிடிக்க அந்த உணர்வால் மட்டுமே இயலும். நாம் வீதியால் நடந்து போகிறோம் ! எண்ணற்ற பூக்கள் வழி நெடுகிலும் பூத்துக் கிடக்கின்றன. எல்லாவற்றையும் பார்த்தபடியே நடக்கிறோம். திடீரென ஒரு பூவை மட்டுமே பார்க்க வேண்டுமென்று மனசு து}ண்டுகிறது. நிற்கிறோம் ! திரும்பிச் செல்கிறோம் அந்தப் பூவை மட்டும் திரும்பிப் பார்க்கிறோம். பக்கச் சார்பற்று, சிபாரிசுகளற்று மீண்டும் ஒரு முறை கவனிக்கத் து}ண்டிய உணர்வே உண்மை அழகினைக் காணும் அடையாளம். இப்படி வரிசையாக அழகைக் காணும் படிகளை அமைத்துச் சென்றால்தான் கஸ்து}ரியின் கவிதை மலர்களின் அழகைப் புரிந்து கொள்ள முடியும். நல்லு}ரில் திலீபன் உயிரில் வினக்கேற்றி யாகம் செய்து கொண்டிருக்கிறான். அவன் முன் பெரும் பெரும் கவிஞர்களெல்லாம் கூடி நின்று கவி பாடிக் கொண்டிருக்கிறார்கள். திலீபன் அழைப்பது சாவையா - இந்த சின்ன வயதில் அது தேவையா ? கவி வரிகள் காற்றில் வருகின்றன. அவன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான். நல்லு}ரின் வீதியிலே நடந்தது யாகம் நாலு நாளில் சரிந்தது தேகம் ! இப்படித் தொடர்கின்றன கவிச்சரங்கள். அத்தனையையும் கேட்டபடியே படுத்திருக்கிறான் திலீபன். இந்தக் கவிதைகள் காலத்தை வென்ற கவிதைகள் ! அவற்றைப் பாடிய கவிஞர்கள் வணக்கத்திற்கு உரியவர்கள். திலீபன் உயிர் வாழ வேண்டுமென்ற மக்களின் மன உணர்வுகளை வடித்துத் தந்த கவிதைகள் அவை. ஆனால் கவிதைப் போக்கில் சட்டென வந்தது ஒரு மாற்றம். திடீரென ஒருத்தி வந்தாள், திலீபன் சிரித்தபடியே சாவை ஏற்பான் ! என்று கவிபாடினாள். ஒரு கணம் எல்லோரும் துணுக்குற்றனர். அவளையே திரும்பிப் பார்த்தனர். அப்படி எல்லோரையும் நின்று திரும்பிப் பார்க்க வைத்த கவிதைக்கு சொந்தக்காரிதான் கஸ்து}ரி. அந்தக் கவிதையைக் கேட்டதும் சோர்ந்து கிடந்த திலீபனின் முகத்தில் சூரியப் பிரகாசம். மல்லிகை வெடித்தது போலச் சிரிப்புப் படர்ந்தது. சட்டென்று விழித்தெழுந்து கஸ்து}ரியை அன்பொழுக நோக்கினான். மறுபடியும் அதைப் படிக்கும்படி வேண்டினான். எந்தக் கவிதையையுமே திரும்பிப் படியுங்கள் என்று கேட்காது சோர்வடைந்திருந்த திலீபன் திடீரென எழுந்து இந்தக் கவிதையை மட்டும் திருப்பிப் படிக்கச் சொல்கிறானே ஏன்? திலீபனின் ஆத்மா தெய்வத் தன்மை பொருந்தியது. உணவையும் நீரையும் கூட உதறியெறிந்த உன்னதமான ஆத்மா ! விருப்பு வெறுப்புக்களைக் கடந்த நேர்மை கொண்டது. அந்த ஆத்மா இவளுடைய கவிதையை மீண்டும் கேட்க ஆசை கொண்டதே ஏன் ? இனி ஆரம்பத்தில் பூக்களுக்காக சொன்ன உதாரணத்தையும் இந்த நிகழ்வையும் ஒரு தடவை ஒப்பிட்டுப் பாருங்கள். கவிதைகளில் அழகு கஸ்து}ரியின் கவிதைகள்தான் என்பதை எளிதாகப் புரிந்து கொள்வீர்கள். அன்று அந்த அழகான கவிவரிகள் இப்படித்தான் திலீபனுடன் பேசின. திலீபன் அண்ணா ! உங்களுக்கு பசியால் பார்வைமங்குவது எனக்குத் தெரிகிறது. இங்கிருக்கும் மக்கள் கூட உங்களிற்கு மங்கலாய் தெரிகிறார்கள் ஆனால் தமிழீழம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. கவிதையைக் கேட்ட திலீபன் திகைத்தான். உண்மையைச் சொன்னாளே ஒருத்தி! அவன் உள்ளம் பதை பதைத்திருக்க வேண்டும். அடுத்த வரிகளில் எல்லோர் இதயங்களிலும் அவள் இடியாய் இறங்கினாள், திலீபனண்ணா ! எனக்குத் தெரியும் நீங்கள் சாகும்போதும் சிரித்துக் கொண்டே சாவீர்கள் ! அவள் அன்று சொன்னது பொய்க்கவில்லை திலீபன் சிரித்தபடியே மடிந்தான். திலீபனுக்காகப் பேசிய அவளுடைய அடுத்த வரிகள். மௌனமாய் அழைக்கும் மரணித்த நண்பர்களிடம் போகப் போகிறேன் என்று மக்களிடம் சொல்கிறீர்கள். என்று கேட்டவள் அவன் மனதில் இருந்த ஓர் சங்கடமான கேள்விக்கான பதிலையும் அந்தச் சபையின் முன் வைக்கிறாள். மகாத்மா காந்தி நீர் அருந்தி உண்ணா விரதமிருந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி, அவர்கூட நீர் அருந்தி நீண்ட நாட்கள் நினைவோடு இருந்தாரே ! நீங்கள் ஏன் அண்ணா அருந்தக் கூடாது ? எனக்குத் தெரியும் நீங்கள் அருந்தமாட்டீர்கள் ! தமிழீழ தாகத்திற்குத் தண்ணீர் அருந்த மாட்டீர்கள் ! அவன் தண்ணீரும் அருந்த மாட்டானென்பதை இரும்பு வரிகளால் அவள் எடுத்துரைத்தாள். அவன் ஏன் தண்ணீரும் அருந்தக் கூடாது ? தண்ணீர்  அருந்தியிருந்தால், உண்ணா நோன்பை நிறுத்தியிருந்தால் வரலாற்றில் திலீபன் இந்த இடத்தைப் பெற்றிருக்க முடியாது ! ஆகவேதான் அவன் நீரை அருந்தக் கூடாது என்றாள் ! இந்த நிகழ்விற்கு வரலாற்றில் நல்லதோர் சான்றுண்டு. அன்று தமிழ் கவிதையின் சுவைக்காக உயிர்தந்த ஒரேயொரு தமிழ் அரசனான நந்திவர்மனின் வாழ்வின் இறுதிப் பகுதியையும் நல்லு}ரில் நடந்த இந்த நிகழ்வையும் ஒரு தடவை ஒப்பிட்டு நோக்கினால் இந்த உண்மையை உணரலாம். கலம்பகம் என்பது ஓர் தமிழ்ப் பாடல் வடிவம். அதை யாராவது ஒருவர் மீது இன்னொருவர் பாடினால் அப்பாடலைக் கேட்பவர் சுடலையில் சென்று படுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாடலுக்கும் அவர் மீது ஒவ்வொரு விறகு கட்டையாக அடுக்கிச் செல்வார்கள். இறுதிப் பாடல் வந்ததும் விறகுகள் தீப்பற்றிக் கொள்ளும். கேட்பவரும் உயிருடன் தீப்பற்றி எரிய வேண்டியதுதான். இதனால் கலம்பகம் பாடுவதைக் கேட்க உலகில் எவருமே முன்வருவதில்லை. ஆனால் ஒருவன் முன் வந்தான் அவனே மேலே சொன்ன நந்திவர்மன். உயிரைவிட தமிழின் சுவையே மேலென உயிர்தந்த உலகின் ஒரேயொரு தமிழன். இந்த நந்திவர்மனுக்குப் பிறகு தமிழ் பாடல் கேட்டு, தமிழுக்காக பட்டினி நெருப்பில் கருகி உயிர் தந்தவனே தியாகி திலீபன். அவன் நீரை அருந்தினாலோ அல்லது உயிர் மீண்டாலோ அன்று நடந்த யாகத்திற்குப் பொருள் இல்லை. அவள் பாடிய தமிழுக்கும் உயிரில்லை! சுடலை வந்த நந்திவர்மன் மீண்டும் வீடு திரும்புவானா ? நினைத்துப் பாருங்கள். தமிழின் இறுதிச் சுவை கண்டவன் உயிரை வைத்துப் பூசை செய்ய ஆசை கொண்டதில்லை. கலம்பகம் கேட்க சுடலையில் படுத்தவன் மறுபடியும் எழுவதும், வாழ்வதும் தமிழின மரபல்ல. அதைப் புரிந்தவன் திலீபன் அதனால்தான் கஸ்து}ரியின் கவிதை அவனை சட்டெனக் கவர்ந்தது. ஆம்! அந்தப் 12 நாட்களாக திலீபன் தனக்குத் தானே ஈமவிறகு அடுக்கிச் செல்லும் இரகசியத்தை கஸ்து} ரியின் கவிதைகளே உலகுக்குச் சொல்லி வைத்தன ! ஆகவேதான் நிறுத்திப் படித்த நிகரில்லா கவிதையாகிறாள் கஸ்து}ரி. இப்படியே மில்லரைப் பற்றியும் அவள் பாட வந்தபோது, மரணத்தைக் கண்டு சிலர் கார்பிடித்துச் சென்ற நேரம் நீ மரணத்தையே காரில் ஏற்றி சென்றவன். என்றாள். அடுத்து அன்னை பூபதிக்காக அடியெடுத்தபோது, உறுதிப் படுத்தப்படாத உலக அழிவு ஓர் நாள் உண்மையாகிப் போனாலும் அதன்பின் வரும் யாருமே அறியாத ஆரம்பம் ஒன்றில் பூபதியின் பெயர் பொறிக்கப் பட்டிருக்கும் ! பிறிதொரு முறை பிறந்து வரமாட்டாள் என்பது பிழையறப் புரிகிறது இறந்து போனவர்க்குத்தானே இன்னோர் பிறப்பு இருக்க முடியும். இதுவே கஸ்து}ரியின் கவியழகு. எப்போதுமே அழகுக்கு ஓர் விஷேட இயல்புண்டு. உலகில் எல்லாமே மனதைவிட்டு நீங்கிவிடும் ஆனால் நீங்காமல் இருப்பது அழகு ஒன்று மட்டுமே. அந்த அழகின் வடிவாகப் பூத்து நிற்பனவே கஸ்த்து}ரியின் கவிதைகள். இந்தக் கவிதைகளைப் படிப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். மாவீரர்கள் எல்லாம் மறுபடியும் பிறப்பார்கள் என்பார்கள் ஆனால் கஸ்து}ரி மட்டும் மறுபடியும் வரமாட்டள் ! ஏனென்றால் அவள் ஏற்கெனவே கவிதைகளாகப் பிறந்துவிட்டாள். ஆனையிறவுப் படைத்தள மோதலில் 1991 லேயே இந்தப் பெண் கவி வீரச்சாவடைந்து விட்டாலும் இன்றைய நிகழ்வையே தன் கவியில் பாடி வைத்துவிட்டு சென்றிருப்பதே இதற்குச் சாட்சியமாகும். வல்லரசுகள் இனியென்ன செய்யும் என்ற கவிதையில், வல்லரசுகளே நீங்கள் வாழ்வதற்காக வாழ்பவர்களை வதைப்பவர்கள் ! என்று கூறியவள் அடுத்து வல்லரசு நாடுகளின் உள்ளார்ந்த இயல்பைக் கூறும்போது, ஆணிவேரை அறுத்துவிட்டு வாடாது நிற்க நீர் ஊற்றுபவர்கள் ! என்று அழகாக நையாண்டி செய்கிறாள். வல்லரசுகள் தங்களது பயங்கரவாத பட்டியலைத் தயாரிக்காத காலத்திலேயே அவள் ஒரு பட்டியலைத் தயாரித்தாள். அந்தப் பட்டியலை வெளியிட்டு தன் வாழ்வை நிறைவு செய்து கொண்டாள். நாளைய செயற்கைப் புயலுக்கு சொந்தம் கொண்டாடப் போகும் சர்வதேசப் பயங்கர வாதிகள் நீங்கள் ! என்று வல்லரசுகளை பட்டியலிட்டு நிறைவடைகின்றன இக்கவி வரிகள். எம்மைப் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தோருக் கெல்லாம் ஓர் கவிப் பட்டியலே தயாரித்த கஸ்து}ரியின் கவி அழகிற்கு இணையெங்கு தேட முடியும் ? இவளின் உயிரற்ற உடலை உள்ளே வைத்திருப்பதால் காலந்தோறும் கல்லறை ஒன்று கௌரவிக்கப் படுகிறது ! -

வீரச்சாவுக்கு முன் தியாகதீபம் திலீபனின் இறுதிஉரை

தியாக தீபம் திலீபன் ,இராசையா பாத்தீபன் தோற்றம் - 27.11.1963 மறைவு - 26.09.1987 வீரச்சாவுக்குமுன் தியாகி திலீபன் ஆற்றிய இறுதி உரையிலிருந்து... "என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். ...... நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வோர் மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும் எனது இறுதி ஆசை இதுதான். வெகு பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும். எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும்" 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்" - என்று அறைகூவி, தன் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த தியாகச் செம்மல் மாவீரன் திலீபனின் பதினாறாவது நினைவாண்டுத் தினம் நெருங்குகின்ற இவ்வேளையில், நெக்குருகி நினைவஞ்சலி செலுத்தி அவனது வரலாற்றை எண்ணிப் பார்க்க விழைகின்றோம். நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வீதியில், ஓருயிர் தன்னைத் தானே சிலுவையி;ல் அறைந்து கொண்டது. சாவைச் சந்திப்பதிற்கு அந்த உயிர் தன்கையில் எடுத்த ஆயுதம், அகிம்சை என்று அழைக்கப்படுகின்ற கோட்பாட்டை! பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதவித்துப் பார்த்திருக்க, தன் உடலையும், உயிரையும் துடிக்கத் துடிக்கத் தற்கொடையாக்கிய ஒரு மாவீரனின் தியாகம், எமது இனத்திற்கு ஊட்டிய விழிப்புணர்வை, அந்த விழிப்புணர்வின் தேவையை, நாம் இந்த வேளையில் இந்தக் காலகட்டத்தில் கருத்தில் கொள்வது பொருத்தமானது மட்டுமல்ல - அவசியமானதும் கூட! பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா, தமிழீழத்தவரின் தேசியப் பிரச்சனையில் வெளிப்படையாக நேரடியாகத் தலையிட்ட போது, எமது மக்கள் நெஞ்சங்களில், இந்தியா ஒரு நம்பிக்கைக்குரிய இரட்சகனாகவே தோன்றியது. 'அகிம்சை என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் அல்லது அகிம்சை என்னும் தத்துவத்தின் அடிப்படையில் நவ இந்தியா தனது அரசியல் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது" என்ற பிரமையை, அல்லது மாயையை இந்தியா ஆட்சி பீடங்கள் தோற்றுவித்திருந்தன. அகிம்சை என்ற தத்துவத்தின் உயர்வான கொள்கைகளும் நீதிகளும், உண்மையாகவே பேணப்படுகின்றன என்று இந்தியப் பொது மக்கள் மட்டுமல்ல, தமிழீழப் பொதுமக்களும் மனமார நம்பினார்கள். அகிம்சைக் கோட்பாட்டின் மூலம், நீதியை வென்றெடுக்கலாம், நியாயத்தை நிலைநாட்டலாம் என்று, நம்மவர்களும் நம்பியிருந்த காலம் அது! அகிம்சை என்ற கோட்பாடு குறித்தோ அல்லது அகிம்சை என்ற தத்துவம் குறித்தோ இப்போது தர்க்கிப்பது அல்ல எமது நோக்கம்! அகிம்சை என்ற கோட்பாடு, ~சரியா-பிழையா| அல்லது ~சரிவருமா - சரிவராத| என்று விவாதிப்பதற்கும் நாம் இப்போது முன்வரவில்லை. நாம் சொல்ல விழைவது அல்லது வற்புறுத்திச் சொல்ல விழைவது என்னவென்றால், 'அகிம்சைத் தத்துவத்தின் அடிப்படையில் தான் நவ இந்தியா செயல்பட்டு வருவதாக, இந்தியஅரசுகள் பறைசாற்றி? வந்தாலும் அவை உண்மையில், அகிம்சைத் தத்துவத்திற்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகின்றன - வந்திருக்கின்றன என்பதுதான்! அதாவது, மஹாத்மா காந்தியின் அகிம்சை வாதத் தத்துவத்தைத் தனது அடிப்படை அரசியல் கொள்கையாக வரித்திருப்பதாக, இந்தியா மேலோட்டமாக முழங்கி வந்தாலும், உண்மையில், இந்தியா தனது அகிம்சைத் தத்துவத்திற்கு எதிராகத்தான் செயல்பட்டு வந்திருக்கின்றது - வருகின்றது, என்பதை நாம் இங்கே வலியுறுத்திக் குறிப்பிட விரும்புகின்றோம்! நாம் இங்கே வெறும் வாயால் வலியுறுத்திக் கூறுவதை, தனது உடலால் உயிரால் வலியுறுத்திக் காட்டி நிரூபித்தவன்தான் எமது தியாகச் செம்மல் திலீபன். 'சிங்கள அரசுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் போராட்டங்களை அகிம்சைப் போராட்டங்களை நடாத்தி, எமது உரிமைகளை வென்றெடுப்போம்| என்று - இன்று - யாராவது கருத்து வெளியிட்டால், அது நகைப்புக்கு இடமாகும் என்பதில் சந்தேகமில்லை. அதனை வரலாறு காட்டி நிற்கின்றது. அதனை நமது மக்களும் பட்டறிவினால் உணர்ந்துள்ளார்கள். ' சிறிலங்கா அரசாங்களுக்கு எதிராக நடாத்தப்படும், அகிம்சைப் போராட்டம் வெற்றி பெறாது" என்பதை, அகிம்சைத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ள எம்மவர்களும் ஒப்புக்கொள்வார்கள்! ஆனால் அகிம்சைப் போராட்ட விடயத்தில் இந்தியா மீது எமது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையோ வித்தியாசமானது! 'அகிம்சைப் போராட்டங்களை - சாத்வீகப் போராட்டங்களை - உண்ணாவிரதப் போராட்டங்களை - இந்தியா மதிக்கும்! ஏனென்றால் இந்தியாவின் அடிப்படைத்தத்துவம் - ஆன்மீகத் தத்துவம் - உயர்வான தத்துவம் - யாவுமே அகிம்சைக் கோட்பாடுதான்! ஆகவே, சிங்கள இனவெறி அரசுகள் எமது அகிம்சைப் போராட்டங்களை அலட்சியம் செய்து, வன்முறையால் அடக்கியது போல், இந்தியா செய்யாது! அது எமது அகிம்சைப் போராட்; டங்களைச் செவி மடுக்கும்! போராட்ட நியாயங்களுக்குத் தலை வணங்கும்!" என்று எமது தமிழினம் சத்தியமகவே நம்பியது. அந்த நம்பிக்கையில், தனது எதிர்காலத்தைப் பணயம் வைக்கவும், எமது தமிழினம் தயாராக நின்றிருந்த வேளை, அந்த 1987! அந்த வேளையில்தான் எமது இனத்தின் விடுதலைக்கான பாதை, எந்தத் திசை நோக்கி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக தனியொருவனாக ஒரு புலி வீரன் புறப்பட்டான். அதற்காக அவன் அன்று எந்திய ஆயுதம் இந்தியாவின் அதே அகிம்சை ஆயுதம்! இன்றுகூட, இந்தியாவின் அழுத்தம் - இங்கிலாந்தின் அழுத்தம் அமெரிக்காவின் அழுத்தம்| என்று பிரச்சார அழுத்தங்கள் பரப்புரை அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. ஆனால், தியாகி திலீபன் ஒரு செய்தியை, வெளிப்படையாகப் பிரகடனம் செய்தான்! அந்தப் பிரகடனத்தைச் செய்வதற்கு அதனை நிரூபணம் செய்வதற்கு அவன் தன்னையே தாரை வார்த்தான்! அவன் சொன்ன - செய்தி என்ன, 'இந்த இனம் - இந்தத் தமிழினம் அடங்காது! அது போராடும்! ஆயுதம் இல்லாவிட்டாலும் அது போராடும்! புல்லையும் எடுத்து அது போராடும்! அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்காது! பேரம் பேசாது - விட்டுக் கொடுக்காது! ஆயுதம் இல்லாவிட்டாலும் - உணவு இல்லாவிட்டாலும் இந்த இனம் தலை வணங்காது! அது தொடர்ந்து போராடும்! தன்னுடைய விடுதலைக்காக - நியாயத்திற்காக - நீதிக்காக - அது எந்த சக்தியையும் எதிர்த்துப் போராடும்! திலீபன் போராடினான்! சாவைச் சந்தித்தான்! ஒரு புதிய விழிப்புணர்வை அவன் எமக்கு ஊட்டினான்! ஆகிம்சைப் போராட்டத்தில் அவன் உண்ணாவிரதமிருந்தான்! போராட்டதிற்குப் பசித்தது! - அவனே உணவானான்! இலங்கை - இந்திய ஒப்பந்தம் முறையாகச் செயல்படுத்தப் படாது மட்டுமல்ல, எதிர் மறையான விடயங்கள் அமுலாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம். சிறிலங்கா அரசிடம் சாத்வீக முறையில் நீதி கேட்டுப் போராட முடியாது என்பதை விடுதலைப்புலிகள் நன்கு உணர்ந்திருந்தார்கள். 'தமிழீழ இடைக்கால நிர்வாகம் விடுதலைப்புலிகளிடம் கையளிக்கப்பட வேண்டும்@ தமிழீழப் பிரதேசத்தில், சிறிலங்கா அரசு பொலிஸ் நிலையங்களை அமைத்தல் நிறுத்தப்பட வேண்டும்;; புனர்வாழ்வு என்ற போர்வையில் மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் சிறையில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் ஊர்காவல் படையினரிடம் உள்ள ஆயுதங்கள் பறிக்கப்படுவதுடன், தமிழ்க் கிராமங்கள், பாடசாலைகள் ஆகியவற்றில் உள்ள இராணுவ முகாம்கள் மூடப்பட வேண்டும்" என்ற கோரிக்கைகளை முன் வைத்து, செப்டம்பர் மாதம் 15ம் திகதி 1987 ம் ஆண்டு, திலீபன் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தான்! நவ இந்தியாவிடம் நீதிகேட்டு அவன் தன் அகிம்சைப் போராட்டத்தைத் தொடங்கினான்! இந்த ஜந்து கோரிக்கைகள் புதிதானவை அல்ல! ஏற்கனவே இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையான விடயங்கள் தாம் அவை! இவற்றை நிறைவேற்றுவதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்;கிய தியாதி திலீபனின் மன உறுதிபற்றிக் கட்டாயம் குறிப்பிட்டேயாக வேண்டும். உறுதி என்றால் எப்படிப்பட்ட உறுதி! எடுத்த காரியத்திற்காக இறுதி மூச்சு உள்ளவரை, உறுதியோடு போராடுகின்ற, உளவலிமையுள்ள இலட்சிய உறுதி! 'சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்த போது, ஒரு சொட்டுத் தண்ணீரையும் உட்கொள்ளாமல், உண்ணாவிரதத்தை மேற் கொள்ள வேண்டும்" என்று திலீபன் முடிவெடுத்தான். அந்த முடிவில் அவன் உறுதியாக இருந்தான். அவனுடைய அந்த இறுக்கமான முடிவுக்கு, தமிழீழத் தேசியத் தலைவர் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒன்று காரணமாக அமைந்தது! 1986 ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் போது, தமிழ்நாட்டிலிருந்து தலைவர் பிரபாகரனின் தொலைத் தொடர்புச் சாதனங்களை, இந்தியா பறிமுதல் செய்தது. இதனால் தலைவர் கடும் சினம் கொண்டார். தொலைத் தொடர்;புச் சாதனங்களை இந்தியா அரசு திரும்பத் தரும்வரைக்கும், ஒரு சொட்டுத் தண்ணீரும் அருந்தாமல், சாகும் வரையிலான உண்ணாவிரதத்தைத் தலைவர் பிரபாகரன் உடனேயே ஆரம்பித்தார். அப்போது நடைபெற்ற விடயங்களை எமது நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். உடனடியாகத் தலைவர் ஆரம்பித்த சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை, ஒரு நாள் கழித்தாவது ஆரம்பிக்கும்படி, இயக்கப் பிரமுகர்களும், போராளிகளும் தலைவரைக் கெஞ்சினார்கள். அந்த ஒரு நாள் அவகாசத்தில், தமிழக மக்களுக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகு சன ஊடகங்களுக்கும் இந்த உண்ணாவிரதம் குறித்து அறிவித்த பின்னர், தலைவர் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கலாமே - என்று கூட அவர்கள் வாதிட்டார்கள்! அந்த ஆலோசனையைத் திட்டமாக மறத்துவிட்ட தமிழீழத் தேசியத் தலைவர், அவர்களுக்குக் கூறிய பதில் இதுதான்! 'இல்லை, நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம்! எனக்கு அது தேவையில்லை. நான் இந்த நிமிடம், இந்த வினாடியிலிருந்து, ஓரு சொட்டுத் தண்ணீரும் அருந்தாமல், சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து விட்டேன். இந்திய அரசு எமது தொலைத் தொடர்புச் சாதனங்களைத் திருப்பித் தரும் வரைக்கும், அல்லது எனது உயிர் போகும் வரைக்கும், எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும். ஆனால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்தியா அரசு பணிந்தது. தொலைத் தொடர்புச் சாதனங்கள், தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே கொண்டு வந்து தரப்பட்டன. தலைவர் தனது உண்ணாவிரதத்தை முடித்தார். இந்த இலட்சிய உறுதிதான் தியாகி திலீபனிடமும் படிந்திருந்தது. தனது தலைவன் முன்னோடியாக நின்று வழிகாட்டிப் போராடியதை, அவன் அடுத்த ஆண்டில் 1987இல் நடாத்தினான். ~ஒரு சொட்டு நீரும் அருந்தாமல், தனது உண்ணவிரதத்தை ஆரம்பிக்கப் போகின்றேன்| என்று திலீபன் அறிவித்தபோது தலைவர் பிரபாகரன் அவனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். ' தண்ணீரையாவது குடித்து, உண்ணாவிரதத்தைத் தொடரலாம்" என்று தலைவர் பிரபாகரன், திலீபனைக் கேட்டுக் கொண்டார். அதற்குத் திலிபன், தலைவரிடம் ஒரு பதில் கேள்வி கேட்டான்! 'அண்ணா, ஆனால் நீங்கள் அப்படிச் செய்ய வில்லையே? நீங்களும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல்தானே, சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டீர்கள்? என்னை மட்டும் ஏன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றீர்கள்?". உயர்ந்தவர்களிடம் மட்டும் காணக்கூடிய இலட்சிய உறுதி அது! தியாகி திலீபனின் மரணமும் வித்தியாசமான ஒன்றுதான்! அவனுடைய உறுதியான இலட்சியத்தை இயக்கம் உணர்ந்திருந்தது - தமிழ் மக்களும் உணர்ந்திருந்தார்கள். இந்திய அரசு, திலீபனின் கோரிக்கைகளுக்கு இணங்காத பட்சத்தில், திலீபன் கட்டாயம் சாவைத் தழுவிக் கொள்வான் என்று எல்லோருக்குமே தெரிந்திருந்தது. அதனால்தான் அவன் உண்ணாவிரதமிருந்த போதே, அவன் மீது இரங்கற் பா பாடப்பட்டது. அவன் உயிரோடிருந்த போதே, அவன் எதிர்கொள்ளப் போகும் சாவுக்காக மக்கள் கலங்கி நின்றார்கள். 'திலீபன் அழைப்பது சாவையா - இந்தச் சின்ன வயதில் அது தேவையா திலீபனின் உயிரை அளிப்பாரா - அவன் செத்தபின் மாற்றார் பிழைப்பாரா" என்று குமுறினார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள். 'விண்ணிருந்து பார்ப்பேன் விடுதலையை என்ற மகன் கண்ணெதிரே இந்தக் கட்டிலிலே முடிகின்றான் பத்தோடு ஒன்றா - இவன் பாடையிலே போவதற்கு சொத்தல்லோ - எங்கள் சுகமல்லோ தாலாட்டுப் பாட்டில் தமிழ் தந்த தாய்க்குலமே போராட்ட வீரன் போய்முடியப் போகின்றான் - போய் முடியப் போகின்றான்... போய் முடியப் போகின்றான்.. என்று புதுவை இரத்தினதுரை அவர்களும் கதறிப்பாடியதை, கால வெள்ளம் அழித்திடுமா என்ன? இப்போது மீண்டும் ஒரு சமாதானத்திற்கான காலம்! இப்போதும் ஒரு குழப்பம்! இந்திய அரசு, தமிழர்களுக்கு ஏதும் பெற்றுத்தரும் - என்று நம்மவர்கள் கொண்டிருந்த எண்ணம் பிழையானது" என்பதை நிரூபிக்க, ஓர் உயிர் சாவைச் சந்தித்தது. அச்சாவு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஊட்டியது. இப்போது - சிறிலங்கா அரசு ஏதேனும் தரும் என்ற எண்ணம் முளைவிட்டுள்ளது. இப்படிப்பட்ட சிந்தனைக்குரிய பதிலை, முன்னோடி உதாரணமாகத் தியாகி திலீபன் தந்துள்ளான் - மீண்டும் ஓர் உதாரணம் எமக்கு வேண்டாம்! புலிக்குப் பசித்தால் அது புல்லைச் சாப்பிடாதுதான்! ஆனால் அது புல்லையும் ஓர் ஆயுதமாகப் பாவிக்கும்! பேரினவாதம் எமக்கு எதையும் தந்துவிடாது என்பதைத் தியாகி திலீபனின் தியாகித்தினூடே நாம் கண்டு கொண்டுள்ளோம்! என் அன்புத் தமிழ்மக்களே, விழிப்பாக இருங்கள் - விழிப்பாக இருங்கள்" என்று சொன்ன திலீபன், அந்த விழிப்புணர்ச்சி எமக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காக, தன்விழி மூடி வீரச் சாவடைந்தான். அவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இக்காலகட்டத்தில், நாமும் விழிப்பாக இருந்து, எமது தேசியத் தலைமையைப் பலப்படுத்துவதே நாம் அவனுக்குச் செய்யக்கூடிய உண்மையான அஞ்சலியாகும்! தியாகி திலீபனுக்கு எனது சிரம் தாழ்த்திய அக வணக்கம்!

வன்னிபடைத்தள தாக்குதலின் 2ம் ஆண்டு

நான்காம்கட்ட ஈழப்போரில் சிறப்பு படை நடவடிக்கைகளுக்கான முக்கியத்துவங்கள் அதிகம். அரசின் படை நடவடிக்கைகளை பொறுத்தவரையில் கிழக்கு மீதான படை நடவடிக்கை மற்றும் வன்னியில் தற்போது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளில் சிறப்பு படையினரின் செயற்பாடுகள் அதிகம். அதற்கேற்ப விடுதலைப்புலிகளின் தாக்குதல் உத்திகளும் வேறுபட்டவை, வான்படையை இந்த போரி அறிமுகப்படுத்திய விடுதலைப்புலிகள் ஆழஊடுருவும் சிறப்பு படை மற்றும் கரும்புலி அணிகளின் இணைந்த தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். வான்புலிகள் படைத்துறை மற்றும் பொருளாதார கேந்திரமையங்களை தொடர்ந்து தாக்கி வருகையில் அவர்களின் நடவடிக்கையுடன், பீரங்கி மற்றும் தரைப்படை சிறப்பு அணிகளை விடுதலைப்புலிகள் இணைத்து வருவது தற்போதைய போரியல் உத்திகளில் ஒரு புதிய பரிணாமமாகவே கருதப்படுகின்றது. 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் நாள் பாலாலி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலின் போது கேணல் கிட்டு பீரங்கி படையணியை ஒருங்கிணைத்திருந்த விடுதலைப்புலிகள், அதே வருடம் ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட அனுராதபுரம் வான்படை தளம் மீதான வான்தாக்குதலின் போது தரைப்படையின் சிறப்பு அணிகளையும் ஒருங்கிணைத்திருந்தனர். எனினும் கடந்த வாரம் 9 ஆம் நாள் அதிகாலை வவுனியா படை தலைமையகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வான்புலிகள், தரைப்படையின் சிறப்பு அணிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கி படையணிகளை விடுதலைப்புலிகள் ஒருங்கிணைத்திருந்தனர். வவுனியா தளத்தை பொறுத்தவரை அங்கு ஸ்குவாட்றன்06 (Mடி17, Mடி171) உலங்குவானூர்தி பிரிவும், ஸ்குவாட்றன் உளவு விமான பிரிவும் நிறுத்தப்பட்டிருப்பது வழமை. எனினும் 2006 ஆம் ஆண்டு வவுனியாவை அண்டிய பகுதிகளில் மோதல்கள் உக்கிரமடைந்ததை தொடர்ந்து ஸ்குவாட்றன்11 பிரிவும், உலங்குவானுõர்திகளில் பெருமளவும் அனுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கு நகர்த்தப்பட்டன. இதனை தொடர்ந்து அனுராதபுரம் வடபகுதி போர்முனையின் பிரதான விமானப்படைத்தளமாக மாற்றம் பெற்றிருந்தது. இது பயிற்சி விமானங்கள் ஸ்குவாட்றன்1 விமானங்களின் தளமாக இருந்ததுடன், வட போர்முனையின் முக்கியத்துவம் கருதி தாக்குதல் உலங்குவானூர்திகளும், போக்குவரத்து வானூர்திகளும், விடுதலைப் புலிகளின் விமானங்களை தாக்குவதற்கு என். கே8 பயிற்சி விமானமும் அங்கு நிறுத்தி வைக்கப்படுவதுண்டு. எனினும் அந்த தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானங்கள் அனைத்தும் தாக்குதலில் அழிக்கப்பட்டது அரசாங்கத்திற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வவுனியா ஜோசெப் படைத்தளத்தை பொறுத்தவரையில் வன்னி படை நடவடிக்கையின் ஒருங்கிணைப்பு மையமாகவும், வான்புலிகளை கண்காணிக்கும் ராடர் மையமாகவும் விளங்கிவருவது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு இந்தியா மேற்கொண்டு வரும் படைத்துறை ஒத்துழைப்புக்களில் வன்னி மீது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளில் இந்திய ஆற்றிவரும் பங்களிப்புக்கள் அதிகமானவை. இலங்கை அரசிற்கு மறைமுகமாக படைத்துறை உதவிகளை வழங்கிவரும் இந்தியா, 40 மி.மீ எல்70 தன்னியக்க விமான எதிர்ப்பு துப்பாக்கிகளையும், நிசாந்த் வகை ஆளில்லாத உளவு விமானங்களையும் லேசர்கள் மூலம் வழிநடத்தப்படும் குறிதவறாத குண்டுகளுக்கான வழிநடத்திகளையும் மறைமுகமாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவினால் வழங்கப்பட்ட ராடர்கள் மூலம் வழிநடத்தப்படும் எல்70 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் வவுனியா படைத்தளத்திலும் நிறுவப்பட்டிருந்தன. இந்த ஆயுத உதவிகளுக்கு அப்பால் படை நடவடிக்கைகளிலும் இந்திய படையின் உயர் அதிகாரிகள் பங்குபற்றி வந்திருந்தனர். இந்தியாவினால் இலவசமாக வழங்கப்பட்ட இந்திரா ஐஐ ராடர்கள், தாழ்வாகப்பறக்கும் விமானங்களை மிகவும் துல்லியமாக கண்காணிக்கும் திறன் கொண்டது. 90 கி.மீ துõரவீச்சும், 35 மீ தொடக்கம் 3000 மீற்றர் உயரத்தில் பறக்கும் விமானங்களை கண்காணிக்கும் இந்த ராடர்களை வன்னியில் இந்திய அரசு நிறுவியதுடன், பாரத் எலக்ரோனிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த இரண்டு பொறியியலாளர்கள் அதனை இயக்கியும் வந்திருந்தனர். இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆளுகைக்கு உட்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் பொறியியலாளர்கள் களமுனைகளில் பணியாற்றுவதற்கான அனுமதியை இந்திய பாதுகாப்பு அமைச்சகமே வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன ஒடுக்குமுறைகளுக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்படவேண்டும் என இந்தியா வெளியில் தெரிவித்துவரும் அதே சமயம் இலங்கைக்கான படைத்துறை உதவிகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசின் இந்த இரட்டை நிலைப்பாட்டை கடந்த 9 ஆம் நாள் விடுதலைப்புலிகளால் வன்னி படை தலமையகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அம்பலப்படுத்தியுள்ளது. அதிகாலை 2.40 மணியளவில் விடுதலைப்புலிகளின் சிறப்பு அணிகளும், சிறப்பு கரும்புலி அணிகளும் வவுனியா படைத்தலைமையகத்தின் ராடர் மையத்தின் வளாகத்திற்குள் உள்நுளைந்த பின்னர், சிறப்பு வேவுஅணிகள் படைத்தளத்தின் முக்கிய மையங்கள் தொடர்பான வேவுதகவல்களை வழங்க கேணல் கிட்டு பீரங்கி படையணியின் 130 மி.மீ பீரங்கிகள் புளியங்குளத்திற்கு கிழக்காக அமைந்துள்ள பீரங்கி நிலையிடங்களில் இருந்து எறிகணைகளை சரமாரியாக வீசத்தொடங்கின. வவுனியா படைத்தலைமையகம் மீதான இந்த தாக்குதல் தொடர்பான தகவல்கள் கொழும்பு வான்படை தலைமையகத்திற்கு உடனடியாக தெரிவிக்கப்பட்ட போது விடுதலைப்புலிகளின் 130 மி.மீ எறிகணை ஒன்று இந்திரா ஐஐ ராடர் தளத்திற்கு அண்மையாக வீழ்ந்து வெடித்திருந்தது. பீரங்கியின் எறிகணைகள் தளத்தினுள் வீழ்ந்து வெடித்த போது சிறப்பு அணிகளும் தளத்தின் முக்கிய பகுதிகள் மீது தாக்குதலை ஆரம்பித்திருந்தன. வவுனியா வான்படைத்தளமானது, நடவடிக்கை படை தலைமையகம், வான்படை தளம், சிறப்பு படை தளம், வான்பாதுகாப்பு கண்காணிப்பு மையம் ஆகியவற்றை கொண்டிருப்பதுடன் வன்னி படை நடவடிக்கைகளின் ஒருகிணைப்பு கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியாவின் தலைமையகமும் அங்கு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கரும்புலிகளின் அணிகள் இராணுவத்தின் சிறப்பு படை அணிகளுடன் மோதல்களில் ஈடுபட்டிருந்த அதே சமயம், சிறப்பு அணிகள் வான்பாதுகாப்பு தளம் மீதான தமது தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருந்தன. லெப். கேணல் மதியழகி தலைமையில் 10 கரும்புலிகள் இந்த சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ள போதும், 20 விடுதலைப்புலிகள் இந்த சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும், 10 கரும்புலிகளுடன், மேலும் 10 சிறப்பு படை உறுப்பினர்கள் வவுனியா தளத்தினுள் களமிறங்கியதாகவும், அவர்களே பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களை நெறிப்படுத்தியதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. இந்த அணியில் விடுதலைப்புலிகளின் ஒளிப்பட குழுவினரும் இருந்ததாக அவை மேலும் தெரிவித்துள்ளன. இந்த மோதல்களின் பின்னர் 10 தொடக்கம் 11 விடுதலைப்புலிகளின் சடலங்களை தாம் கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு தகவல்வெளியிட்டுள்ள அதேசமயம் ஏனைய விடுதலைப்புலிகள் தப்பி சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 3.05 மணியளவில் ஆரம்பமான தாக்குதல்கள் உக்கிர கட்டத்தை அடைந்த போது வான்புலிகளின் இரண்டு விமானங்கள் வவுனியா வான்படை தளத்தின் மீது அதிகாலை 3.45 மணியளவில் 25 கி.லோ எடையுடைய நான்கு குண்டுகளை வீசியுள்ளன. இந்த குண்டுகளில் ஒன்று இந்திரா ராடர் அமைந்துள்ள தளத்திற்கு அண்மையாக வீழ்ந்ததுடன், மற்றைய குண்டு தளத்திற்குள் வீழ்ந்துள்ளது. ஏனைய இரண்டு குண்டுகளும் வெடிக்கவில்லை. வான்புலிகளின் விமானங்களை அதிகாலை 3.26 மணியளவில் தமது ராடர்களின் மூலம் அவதானித்ததாக படைத்தரப்பு தெரிவித்துள்ள போதும் அதற்கு முன்னரே வவுனியா படைத்தளத்தில் உள்ள ராடர்கள் சேதமடைந்துவிட்டதாக படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிகாலை 5.00 மணிவரையில் நடைபெற்ற இந்த தாக்குதல்களில் 75 இற்கு மேற்பட்ட 130 மி.மீ எறிகணைகள் முகாம் பகுதிகளில் வீழ்ந்து வெடித்ததாகவும் இதன் போது 13 இராணுவத்தினரும், ஒரு காவல்துறை உறுப்பினரும், கொல்லப்பட்டதுடன், 18 இராணுவத்தினர், 8 காவல்துறை உறுப்பினர்கள் மற்றும் 5 வான்படை சிப்பாய்கள் ஆகியோர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ள போதும் இழப்புக்கள் அதிகம் என சுயாதீன தகவல்கள் தெரிவித்துள்ளன. வவுனியா வான்படை தளத்தில் அமைந்துள்ள இந்திராஐஐ ராடர் சிறிய சேதம் அடைந்ததாக படைத்தரப்பு முன்னர் தெரிவித்த போதும் பின்னர் அதனை மறுத்திருந்தது. ஆனால் ராடர் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க தெரிவித்துள்ளது. மேலும் வான்புலிகளின் தாக்குதல் விமானங்களில் ஒன்றை தமது எவ்7ஜி தாக்குதல் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் அரச தரப்பு மேலும் தெரிவித்துள்ளது. எனினும் தமது சிறப்பு அணிகளுடன், வான்புலிகள் மற்றும் பீரங்கி படையணிகள் மேற்கொண்ட தாக்குதலில் வவுனியா படைத்தளத்திள் வான்பாதுகாப்பு ராடர் தொகுதிகள், தொலைத்தொடர்பு கோபுரம், ஆயுத களஞ்சியம் ஆகிய பகுதிகள் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட தமது விமானங்கள் பாதுகாப்பாக தளம் திரும்பியுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெ?வித்துள்ளனர். தாக்குதல் நடைபெற்ற சில மணிநேரங்களில் வான்புலிகளின் விமானங்களில் ஒன்றை தமது வான்படையினர் முல்லைத்தீவு பகுதிக்கு அண்மையான வான்பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக அரச தரப்பு தெரிவித்து வந்த தகவல்கள் வவுனியா படைத்தளம் மீதான தாக்குதல் செய்தியின் முக்கியத்துவத்தை குறைத்திருந்தது. ஆனால் இந்த தாக்குதல் தொடர்பாக விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ அறிவித்தல் வருவதற்கு முன்னர் வன்னியில் உள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகருடன் தமிழ் ஊடகவியலாளர் இது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது "இந்த தாக்குதலில் தமது 2 தாக்குதல் விமானங்கள் பங்குபற்றியதாகவும், அவை அனைத்தும் பாதுகாப்பாக தளம் திரும்பிவிட்டதாகவும்' அவர் தெரிவித்திருந்தார். சீனாவிடம் இருந்து அண்மையில் இலங்கை அரசினால் கொள்வனவு செய்யப்பட்ட, எவ்7ஜி வான் தாக்குதல் விமானங்கள் மூலமே வான் புலிகளின் சிலின் 143 விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ள போதும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை என்பது பல மட்டங்களில் பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. வானில் இருந்து வானுக்கு பாயும் ஏவுகணைகளையும் உந்துகணைகளையும் செலுத்தக்கூடிய இந்த விமானங்களில் 30 மி. மீ பீரங்கிகளும் பொருத்தப்பட்டிருப்பதுண்டு. வான்புலிகளின் விமானங்களை எவ்.7 விமானம் வானில் இருந்து வானுக்கு பாயும் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக படை வட்டாரங்களின் ஒரு தரப்பினர் தெரிவித்து வரும் போது, 30 மி.மீ பீரங்கிகளின் மூலமே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மற்றொரு தரப்பு தெரிவித்து வருகின்றது. படைத்தரப்பின் மாறுபட்ட இந்த தகவல்கள் பாரிய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ள போதும், இந்த வான் தாக்குதல் தொடர்பாக வேறு பல கேள்விகளும் எழுந்துள்ளன. அதாவது, எவ்.7 விமானம் அதன் ஏவுகணை அல்லது பீரங்கி மூலம் விமானத்தை தாக்கியிருப்பின் அதற்கான பதிவுகள் அதன் ராடர் சாதனத்தில் பதிவாகியிருக்கலாம். ஆனால் அவ்வாறான தகவல்கள் எதுவும் படைத்தரப்பினால் வெளியிடப்படவில்லை. தம்மிடம் அதற்கான ஒளிப்பட ஆதாரங்கள் எதுவும் இல்லை என வான்படை பேச்சாளர் ஸ்குவாட்றன் லீடர் சஞ்சய அதிகரி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவை நோக்கிய நகர்வில் ஈடுபட்டுவரும் 59 ஆவது படையணியின் முன்னரங்கிற்கு அண்மையாக விமானம் வீழ்ந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ள போதும் ஆளில்லாத உளவு விமானங்கள் மூலம் எடுக்கப்பட்ட தகவல்கள் எதுவும் அதற்கு ஆதாரமாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எவ்7 விமானம் தாக்குதலை நடத்தியிருப்பின் தாக்குதல் நடைபெற்ற இடம் தொடர்பான அமைவுப்புள்ளி விமானிக்கு தெரிந்திருக்கலாம். எனவே அந்த பகுதிகளில் உளவுவிமானங்கள் மூலம் தேடுதல் நடத்துவது இலகுவானது. ஆனால் அவ்வாறான தகவல்கள் எதனைøயும் இந்த பத்தி எழுதப்படும் வரையில் வான்படை வெளியிடவில்லை. ஆனால் இலங்கை வான்படையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வான்புலிகள் தமது விமானத்தை சடுதியாக தரையிறக்கியிருக்கலாம் என்பது சிலரது கருத்தாகவுள்ளது. சாதாரண வீதிகளில் கூட தரையிறங்கும் வான்புலிகளின் விமானங்களை விடுதலைப்புலிகள் பின்னர் வேறு பகுதிக்கு நகர்த்தியிருக்கலாம் என்பது அவர்களின் வாதம். கடந்த மாதம் 26 ஆம் நாள் கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகம் மீது வான்புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் போது திருமலையில் உள்ள தமது இலக்கினை சொற்ப நேரத்தில் அடையும் நோக்கத்துடன் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து வான்புலிகள் மேலெழுந்ததாக தெரிவித்த படைத்தரப்பு, கடந்த வாரம் வவுனியா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது அதற்கு அண்மையாக உள்ள புளியங்குளத்திற்கு அண்மையான பகுதியில் இருந்தே வான்புலிகளின் விமானங்கள் புறப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளன. எனவே இலங்கை வான்படையின் எவ்.7 விமானங்கள் கட்டுநாயக்கா வான்படை தளத்தில் இருந்து புறப்பட்டு வவுனியா வான்பரப்பை அடைவதற்கு எடுக்கும் 15 நிமிடங்களில் வான்புலிகள் பாதுகாப்பாக தளம் திரும்ப முடியும். மேலும் வெளிச்சங்கள் முழுவதும் அணைக்கப்பட்ட நிலையில் மிகவும் தாழ்வாக பறக்கும் வான்புலிகளின் விமானங்களை மணிக்கு 950 தொடக்கம் 2175 கி.மீ வேகத்தில் பறக்கும் எவ்.7 விமானங்கள் மூலம் இலகுவில் இடைமறித்து தாக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியானதே. வான்புலிகளின் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்து வரும் தகவல்கள் மிகவும் பலவீனமானவை. களத்தில் கொல்லப்படும் விடுதலைப்புலிகளின் இழப்புக்கள் தொடர்பாக மிதமான தகவல்களை வெளியிட்டு வருவதாக அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துவரும் நிலையில், வான்புலிகளின் இழப்புக்கள் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள தற்போதைய தகவல்கள் எதிர்வரும் காலங்களில் மிதமாகி போகலாம் என்ற கருத்துக்களும் தோன்றியுள்ளன. இதனிடையே அரசாங்கம் ஊடகங்கள் மீது அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் போர் தொடர்பான உண்மையான தாகவல்கள் வெளி வருவது மிகவும் கடினமானது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அனுராதபுரம் வான்படை தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் முதலில் 3 விமானங்கள் சேதமடைந்ததாகவே அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் அன்றைய தாக்குதலில் 24 விமானங்கள் அழிந்து போனதாக பின்னர் தகவல்கள் வெளிவந்தன. எனவே கடந்த வாரம் நடைபெற்ற வவுனியா படைத்தளம் மீதான தாக்குதலில் ஏற்பட்டுள்ள மொத்த இழப்புக்கள் தொடர்பான தகவல்கள் வெளிவர மேலும் பல காலங்கள் செல்லலாம். ஆனால், இந்த தாக்குதல் ஏற்படுத்தியுள்ள படைத்துறை இழப்புக்களை விட இராஜதந்திர பின்னடைவுகள் அதிகமானவை. அதாவது இந்திய அரசு மறைமுகமாக மேற்கொண்டுவந்த படைத்துறை ஒத்துழைப்புக்கள் அனைத்துலகத்தை எட்டியுள்ளன. அதாவது தமிழ் மக்கள் மீது இந்தியா நேரடியான போரை தொடுத்துள்ளதா என்ற கேள்விகள் உலகத் தமிழ் மக்களின் மனங்களில் எழுந்துள்ளன. மேலும் கடந்த இரு வாரங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு வான் தாக்குதல்களும் தற்போதைய வான்காப்பு உத்திகளை மாற்றி அமைக்க வேண்டிய கட்டத்திற்கு அரசாங்கத்தை தள்ளியிருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் வான்புலிகளின் தொடர்ச்சியான தாக்குதல் படைத்தரப்பின் போர் உத்திகளை மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிலைக்கு அவர்களை தள்ளுவதுடன் அவர்களின் தாக்குதல் திட்டங்களிலும் மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடியது. இராணுவம் பாரிய நடவடிக்கைகளுக்கு திட்டமிடும்போது அவர்களின் பின் தளங்கள், கனரக ஆயுதத்தளங்கள், கட்டளை மையங்கள், ஆயுதக்களஞ்சியங்கள், ராடர் நிலைகள் என்பனவற்றின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் இராணுவ நடவடிக்கைக்கான திட்டங்களில் பாரிய தாக்கங்களை உண்டு பண்ணக்கூடியவை என்றால் அதனை மறுக்க

திலீபனுடன் பன்னிரண்டாம் நாள் 26-09-1987<23ம் ஆண்டு நினைவு-2010

திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் - 26.09. 1987 தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப் படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீரச் சாவடைந்தவர். அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாள் போராளி கவிஞர் மு.வே. யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ' திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்' என்ற பெயரில்வெளியிட்ட புத்தகத்தின் பன்னிரண்டாவது பகுதி> இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது! திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். மாறன், ராஜன், தேவர், இரு நவீனங்கள், மாத்தயா, திலீபனின் அண்ணன் இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு தூங்கினோம். பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாகப் பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை. மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழும்பியதும் நான்தான் முதலில் திடுக்கிட்டு எழும்பினேன். கும்மிருட்டில் என்ன செய்வதென்று தெரியாமல். "நவீனன்……" என்று அழைத்தபடி திலீபனின் கட்டிலில் கையை வைத்தேன். அவர் ஆடாமல் அசையாமல் படுத்திருந்தார். அதனால் மனம் அமைதியடைந்தது. அவரின் உடல் 'ஜில்' லென்று பனிக்கட்டியைத் தொடுவது போல் குளிர்ந்து காணப்பட்டது. மனம் 'பட பட' வென்று அடிக்கத் தொடங்கியது… மீண்டும் 'நவீனன்" என்று அழைத்தேன். நவீனன் எழும்பி விட்டான். ஐந்து நிமிடங்களில் மேடையில் ஒரு பெரிய மெழுவர்த்தி எரியத் தொடங்கியது… மெழுகுவர்த்தியின் ஒளியிலே திலீபனின் முகம் நன்றாகத் தெரிந்தது… ஒரே வினாடிதான்! அதற்குள் அந்த மெழுகுவர்த்தி காற்றின் வேகத்தினால் அணைந்துவிட்டது. பலத்து வீசிய காற்று அதை மீண்டும் எரிய விடுமா? என்பது சந்தேகமாகத்தான் இருந்தது….. ஆனால், ஐந்து நிமிடங்களில் மின்சாரம் வந்துவிட்டது… திலீபனின் நிலை எல்லையைக் கடந்துவிட்டது என்பது எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அதனால், என்மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது… நாடித்துடிப்பைப் பரிசோதிக்கிறேன். கணிக்க முடியவில்லை…. மிகவும் மெல்லியதாக அடிக்கிறது…. உடனே இரத்த அழுத்தத்தைக் கணிக்கின்றேன்… அது மிகவும் குறைவாக இருக்கிறது… 50ஃ? என்ற நிலையில் ஒரு நோயாளியால் இன்னும் எத்தனை மணித்தியாலங்கள் உயிர் வாழ முடியும் என்பது எனக்குத் தெரியும். உலகமே தலைகீழாகச் சுற்றுவது போல் இருந்தது. திலீபன் அடிக்கடி கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. 'வாஞ்சி அண்ணை! எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட பலவந்தமாகவோ, சுய நினைவற்ற நிலையிலோ தர முயற்சிக்கக்கூடாது… அப்படி என் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் இறக்குமட்டும் எனக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக் கூடாது… சுயநினைவோடு என்றாலும் சரி… சுய நினைவில்லை என்றாலும் சரி…. இதுக்குச் சம்பதிக்கிறனெண்டு சத்தியம் செய்து தாருங்கோ…" என்று விடாப்பிடியாக நின்று என்னிடம் சத்தியம் வாங்கிய பிறகுதான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பி;த்தார் அவர். அப்படியிருக்க, அவர் விருப்பத்துக்கு மாறாக எப்படி அவருக்குச் சிகிச்சையளிப்பேன்? எப்படி அவருக்கு நீர் ஊட்டுவேன்? மனிதநேயத்தையும் - அதன் தார்ப்பரியங்களையும் மதிக்கும் ஓர் வைத்திய சேவையாளன் என்ற நிலையைத் திலீபன் விஷயத்தில் நிறைவேற்ற விடாமல் என் கைகளைக் கட்டிப் போட்டது எது?....... எது? ஆம்@ "சத்தியம்!" என்ற இந்த ஐந்து எழுத்துக்களுக்காகத் தானே திலீபன், " அகிம்சை" என்ற நான்கு எழுத்துக்களைக் கொண்ட போராட்டக் களத்தில் குதித்தான். கடமை – கண்ணியம் - கட்டுப்பாடு என்ற மூன்று உயரிய அம்சங்களினால் வேரூன்றி வளர்த்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதால், 'கட்டுப்பாடு' என்ற நல்வழியிலே கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகத் திலீபனை என் கண்ணெதிரிலேயே 'பலி' கொடுப்பதைத் தவிர, வேறு வழியொன்றும் எனக்குத் தெரியவில்லை. என் கடமையைச் செய்வதற்காக மேடையின் பின்பக்கம் இறங்கிச் செல்கிறேன். அங்கே பிரதித் தலைவர் மாத்தயா நிற்கிறார். அவரிடம் திலீபனின் உடல் நிலையின் அபாயகரத்தைப் பற்றி எடுத்துரைக்கிறேன். திலீபனின் உடல் நிலை மோசமாகிவிட்ட விடயம் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பரவத் தொடங்கியது விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் பொதுமக்களும் மேடையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். திலீபனுக்கு கடைசி நிமிடம் வரையும் ஒருவித சிகிச்சையும் அளிக்க முடியாமல் எமது கைகள் கட்டப்பட்டிருந்ததற்கு வேறு முக்கிய காரணமும் ஒன்று இருந்தது. எமது காதில் விழக்கூடியதாகவே பல எதிரணி உறுப்பினர்களும், எமது இயக்கத்துக்கு எதிரானவர்களும் பேசியதைக் காதால் கேட்டவர்களில் நானும் ஒருவன். "புலிகள் தந்திரமாக மக்கள் மனத்தை மாற்றுவதற்காக உண்ணாவிரதம் என்ற பெயரிலே தண்ணியைக் குடிச்சுக்கொண்டு இருப்பார்கள்… ஆர் இதைக் காணப்போகினம்? கடைசியில் 5 தீர்மானங்களும் நிறைவேறுமட்டும் வைத்தியம் செய்து ஆளைச் சாகவிடமாட்டினம்… இதுதான் இந்த சாகும்வரை நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருப்பதன் உண்மை…" இப்படியான பேச்சுக்களுக்கு உண்மை வடிவம் கொடுத்து, "புலிகள் பொய்யர்கள்" என்ற கெட்ட பெயரை வரவிடாமல் காப்பாற்றுவதற்காகவும் எம்கைகள் கட்டப்பட்டிருந்தனவே தவிர, வேறு ஒன்றுக்காகவும் அல்ல. எம் கைகள் மட்டும் கட்டுப்படாமல் இருந்திருந்தால், எமது உயிரினும் மேலான, தியாக தீபம் திலீபனை எமது உயிர்களைக் கொடுத்தாவது காப்பாற்றியிருப்போம்…. ஆனால்…… முடியவில்;;லையே? விதி! தன் வலிய கரங்களை மிக நன்றாகவே திலீபனின் கழுத்தில் இறுக்கிவிட்டான். உயிருடன் அந்த மனித தெய்வம் நீண்ட நேரம் போராடிக் கொண்டிருப்பதை என் கண்களால் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டமைக்காக, நான் வெட்கப்பட்டேன். வேதனைப்பட்டேன். ஆனால், என்ன செய்ய முடியும்? 265 மணித்தியாலங்கள் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்த அந்த தியாகத் திலீபன், இன்று காலை (26.09. 1987) 10.48 மணியளவில், எம்மையெல்லாம் இந்தப் பாழும் உலகில் பரிதவிக்க விட்டுவிட்டுத் தான் மட்டும் போய்விட்டான். ஆம்@ தமிழர்தம் விளக்கு அணைந்துவிட்டது! அணைந்தேவிட்டது! டொக்ரர் சிவகுமார் அவர்கள், திலீபன் இறந்;த பின் அவரைப் பரிசோதனை செய்து தனது இறுதியான முடிவைச் சொல்லிவிட்டு, திலீபனின் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்த போது, மக்கள் கதறி அழத் தொடங்கினர்… எங்கும் அழுகைச் சத்தம்…. விம்மல் ஒலி… சோக இசை…. வானமே இடிந்து விட்டதைப் போன்ற வேதனை எல்லோரையும் ஆக்கிரமித்திருந்தது. வானத்து நிலவு கீழே விழுந்து விட்டது போன்ற உணர்வு! காலை 11 மணிக்கு 'என்பார்ம்' செய்வதற்காக, அவரது உடலை யாழ். வைத்தியக் கல்லூரிக்கு எடுத்துச் சென்றோம். பிற்பகல் 4.15 மணியளவில் திரும்பவும் அதே மேடைக்கு முன்பாக அவரின் புகழுடம்பு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் புள்ளி போட்ட, பச்சையும் - கறுப்பும் கலந்த இராணுவ உடையும், தொப்பியும் திலீபனுக்கு அணியப்பட்டு, 'லெப்டினன்ட் கேணல்' என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது. அவர் செய்த தியாகத்துக்கு அவருக்கு எந்தப் பட்டமும் தகுதியில்லை, அல்லது ஈடாகாது என்பது எமக்குத் தெரியும்……. ஆனால், என்ன செய்ய முடியும்? அவரைப் படுக்க வைத்திருந்த பேழையை, விடுதலைப்புலிகளின் சிவப்பு நிறத்திலான கொடி அலங்கரித்திருந்தது. தந்தை, சகோதரங்கள், உறவினர்கள் ஆகியோர் உடலை வந்து தரிசித்துச் சென்றனர். பெட்டியைத் திறந்ததுமே அவரது அன்புத் தந்தையும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான, திரு. இராசையா அவர்கள் "ஓ…" என்று அலறியவாறு அவர் உடல்மீது விழுந்து புரண்டு அழத் தொடங்கிவிட்டார். அவரின் அழுகையைத் தொடர்ந்து பொதுமக்களும், சிறு பிள்ளைகளைப் போல் குலுங்கிக் குலுங்கி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது. பொதுமக்கள் மணிக்கணக்காகக் காத்திருந்து, நீண்ட வரிசையிலே வந்து தமது இறுதி அஞ்சலியை மண்ணின் மைந்தனுக்குச் செலுத்தினர். ஈரோஸ் இயக்கத் தலைவர் திரு. பாலகுமார், தமிழகத்திலிருந்து வருகைதந்து தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் தலைவர் திரு. நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதவாறு தமது அஞ்சலியைச் செலுத்தினர். தலைவர் பிரபாகரன், சொர்ணம், மாத்தயா, குமரப்பா, புலேந்திரன், சந்தோசம், ஜொனி, பிரபா, இம்ரான், அன்ரன் மாஸ்ரர், சங்கர் அண்ணா, நடேசன் மற்றும் ஏனைய இயக்க உறுப்பினர்களும் தத்தம் இறுதி அஞ்சலியைத் தமது தோழனுக்குச் செலுத்தினர். சாஜகான், நரேன், அருணா, சிறி, ராஜன், தினேஸ் போன்றோர் தம்மைச் சமாளிக்க முடியாமல் விம்மி விம்மி அழுதனர். திலீபனின் தியாகப் பயணத்தில் 12 நாட்கள் அவரின் கூட இருந்து, அவரின் போராட்டத்தில் பங்குபற்றி, வேதனையின் எல்லைக்கே சென்றுவந்த எனக்கு, இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இன்னும் எத்தனை நாட்கள் தேவையோ நானறியேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! திலீபனின் உயிர் அநியாயமாகப் போகவில்லை அதற்குப் பதிலாக அவர் ஒரு படிப்பினையை எமக்குக் கற்பித்து விட்டுப் போயுள்ளார்… அகிம்சைப் போராட்டம் என்பது மனித நேயமும், உயர் பண்பும் மிக்கவர்களிடம்தான் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்… ஆயுதங்கள் தான் எமது தமிழீழப் போராட்டத்தைப் பொறுத்தவரை சரியான பதில் தரமுடியும் என்பதையும், திலீபன் மறைமுகமாக உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார் என்பதே எமது கணிப்பு… அந்தத் தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக!

திலீபனுடன் பதினோராம் நாள் 25-09-1987<23ம் ஆண்டு நினைவு-2010

திலீபனுடன் பதினோராம் நாள் - 25.09. 1987 இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது. 'கோமா' வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது. அவர் படுத்திருந்தது சிறிய கட்டில்…. ஆகையால், தேவரிடம் சொல்லி, பெரிய கட்டிலொன்று கொண்டுவரச் செய்து, அதில் திலீபனைப் படுக்க வைத்தோம். அப்போதுதான் அவர் கட்டிலில் ஏற்கனவே சிறுநீர் கழித்திருந்ததைக் காண முடிந்தது. மாறன், நவீனன், தேவர் ஆகியோர் மிகக் கஷ்டப்பட்டு அவரது ஆடைகளை மாற்றி, புத்தாடை அணிவித்தனர். அவர் சுயநினைவோடு இருக்கும்போது புது ஆடைகளை அணியும்படி பலமுறை நான் கேட்டபோது, பிடிவாதமாக மறுத்து விட்டார். "சாகப் போகிறவனுக்கு எதுக்கு வாஞ்சி அண்ணை புது உடுப்பு?" என்று, தனக்கேயுரிய சிரிப்புடன் கேட்டார்…… அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்… பிற்பகல் 4 மணியளவில் திலீபனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு வந்தது. ஆம்@ அவர் முழுமையான கோமாநிலைக்கு வந்துவிட்டார்…… மைதானத்தில் கூடியிருந்த சனக் கூட்டத்தினர் திலீபனின் நிலைகண்டு மிகவும் வருந்தினர்….. ஒவ்வொருவர் முகத்திலும் சோகத்திரை படர்ந்திருந்தது. இன்று காலையிலிருந்து, இலட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்து குவிந்து கொண்டிருந்தனர். லொறிகள், பஸ்கள், வான்கள், கார்கள், ஏன்? மாட்டு வண்டிகளிற் கூட அவர்கள் சாரி, சாரியாக வந்து நிறையத் தொடங்கினர். யாழ்ப்பாணத்திலோ, அல்லது இலங்கையின் எந்தப் பகுதியிலோ இதுவரை எந்த நிகழ்சிக்கும் இப்படி மக்கள் வெள்ளம்போல் நிறைந்ததாகச் சரித்திரமே இல்லை. வட்டுக்கோட்டையில் இருந்து மட்டும் 50 மாட்டு வண்டிகள் புலிக்கொடிகளை ஏந்தியவாறு, மக்களை நிறைத்துக் கொண்டு வரிசையாக வந்து சேர்ந்தன. இன்று பிற்பகல் 1.30 மணியுடன் முல்லைத்தீவில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திருச்செல்வம் என்ற விடுதலைப் புலி உறுப்பினர், 60 மணித்தியாலங்களை வெற்றிகரமாகத் தாண்டிவிட்டார். மட்டுநகரில் மதன் என்ற விடுதலைப் புலி இன்று காலை 10.40 மணிக்கு, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் திலீபனுக்கு ஆதரவாக ஆரம்பித்தார். அதேபோல் திருக்கோணமலையிலும் 'கிருபா' என்ற போராளி இன்று மாலை ஆரம்பித்துவிட்டார். திருக்கோணமலை. முல்லைத்தீவு, மட்டுநகர் ஆகிய மாவட்டங்களில்தான் கடந்;;த 10 ஆண்டுகளாக, சிறீலங்கா அரசு திட்டமிட்டவாறு சிங்கள மக்களைக் குடியேற்றி வருகின்றது. 1983 ஆம் ஆண்டு கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையிலே படுகொலை செய்யப்பட்ட தமிழர்களில் தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் மிக முக்கியமானவர்கள். ஜெயிலிலிருந்த சிங்களக் கைதிகளைத் தூண்டிவிட்டு 52 பேர்களைக் கொல்வதற்குத் திட்டம் வகுத்துக் கொடுத்தது வேறு யாருமல்ல – கனம் ஜே. ஆர். ஜெயவர்த்தனாதான். 52 பேர்களைத் திட்டமிட்டபடி கொலைசெய்த நூற்றுக்கணக்கான சிங்கள ஆயுள் தண்டனைக் கைதிகளும் என்ன பரிசு அளிப்பதென்று ஜே. ஆர். ஒரு வருடமாக மண்டையைப் போட்டு உடைத்தார். கடைசியில் அனைவரையும் அவர்களின் குடும்பங்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 'டொலர் பாம்', 'கென்ற் பாம்' ஆகிய இடங்களில் நவீன வீடுகளைக் கட்டிக்கொடுத்து, குடி அமர்த்தினார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000 ரூபா பணமும், 2 ஏக்கர் நிலமும், குடியிருக்க வீடும் வழங்கப்பட்டன. இது மட்டுமா? கொலைகாரர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலைகளும் ஏற்படுத்தப்பட்டன. இது வெறும் பொய்யல்ல@ நடந்த உண்மை. என்ன ஆச்சரியம்? உலக வரலாற்றில் எந்த நாட்டிலாவது இப்படி நடந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படிப்பட்ட ஜே. ஆர். என்ன சொல்கிறார் தெரியுமா? தான் உண்மையான 'காந்தியவாதி' என்று கூறுகிறார். என்ன கேலிக்கூத்து இது! காந்தீயம் அத்தனை மலிவானதா? இத்தனை இனத்துவேசியான ஜே. ஆருடன் 'தமிழர் நலம் காப்பது' என்ற பெயரில் ஓர் ஒப்பந்தம் செய்வதென்றால், அது நடைபெறக்கூடிய காரியமா? அல்லது நடக்கத்தான் விடுவாரா அந்தக் குள்ளநரி? ஒப்பந்தம் சரிவர அமுலாக வேண்டும் என்பற்காகத்தான். அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டு – திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். அவர் "தமிழீழத்தைப் பிரித்துத் தா" என்று கேட்டு உண்ணாவிரதமிருந்தால் அதை எதிர்ப்பதில் நியாயம் உண்டு: இதை ஏன் எதிர்க்கிறார்கள்? புரியவேயில்லை! நீங்கள் இருவரும் கையெழுத்துப் போட்ட ஒப்பந்தத்தை ஒரு திலீபன் சரிவர நிறைவேற்றும்படி கேட்கிறான். இது நியாயமான கோரிக்கையா இல்லையா….? இதைத் தமிழ் மக்களே முடிவு செய்யட்டும். இன்று (25.09.87) இலங்கைக் கொம்ய10னிஸ்ட் கட்சியின் வடபிராந்தியக் குழு "இந்திய இராணுவத்தின் அத்துமீறலைக் கண்டிக்கிறோம்." என்ற தலைப்பில் ஓர் அறிக்கையைப் பத்திரிகைகளுக்கு வெளியிட்டிருந்தது. வடக்கும் - கிழக்கும் இணைந்த பிரதேச சுயாட்சியையும், நியாயப10ர்வமான சகல உரிமைகளையும் வழங்க முன்வர வேண்டுமென்று அது தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. இன்று திருகோணமலையில் விறகு ஏற்றிச் சென்ற எட்டு அப்பாவித் தமிழர்கள் சிங்களக் குடியேற்றவாசிகளால் வெட்டிக் கொல்லப்பட்டதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. நாளைமுதல் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து அரச அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும், போக்குவரத்துச் சேவை ஊழியர்களும் திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதமும் மறியலும் செய்து, தமது வேலைகளைப் பகிஷ்கரிக்கப் போவதாக சகல பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி இருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் 'நிதர்சனம்' தொலைக்காட்சிச் சேவை கடந்த 10 நாட்களாக தினமும் இரவு 7 மணிமுதல் விசேட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றது. இன்றிரவு திலீபனின் உடல்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது. அவர் சுவாசிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். திலீபன் சுயநினைவுடன் இருந்தபோது அவரால் விரும்பிக் கேட்கப்படும் பாடல் ஒன்றை, இன்றிரவு மேடையில் ஒலிபரப்பினார்கள். அந்தப் பாடல் எனக்கு மட்டுமன்றி, திலீபன் இருந்த அந்த நிலையில் அனைவரினது கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்துவிட்டது. "ஒ… மரணித்த வீரனே! - உன் ஆயுதங்களை எனக்குத் தா ……… உன் சீருடைகளை எனக்குத் தா ……… உன் பாதணிகளை எனக்குத் தா! (ஓ…. மரணித்த) கூட்டத்திலே சில பெண்கள் இந்தப் பாடலைக் கேட்டதும் விம்மி விம்மி அழத் தொடங்கினர். அந்த வேதனைமிக்க இரவு சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருக்கிறது. இரவே! நீ ஏன் இரக்கமில்லாமல் எமைவிட்டு மறைந்து கொண்டிருக்கிறாய்? பயணம் தொடரும்.....

திலீபனுடன் பத்தாம் நாள் 24-09-1987<23ம் ஆண்டு நினைவு-2010

திலீபனுடன் பத்தாம் நாள் -24-09-1987 பெற்றோர் – பிள்ளைகள் - சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முண்ணாயே முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது: கண்கள் கண்ணீர்ரை சொரிகின்றது. ஆனால், இவர்களின் ஒருவர் அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருப்பைப் பார்க்கும்போது………. துயரத்தின் எல்லைக்கே நாம் போய்விடுகின்றோம். உலகமே சில வினாடிக்குள் வெறுத்துப்போய்விடும். கண்களில் அழுவற்குக் கண்ணீர்கூட எஞ்சியிருக்காது. ஆனால், இவர்கள் ஓருவர் ஓரு சொட்டு நீர் கூடஅருந்தால்10 நதற்களாக எம் கண் முண்ணாதல் அணு அணுவாகச் சாவின் விளின் வழளிம்பில் நின்று தத்தளிப்பதைப் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது ஏற்படும் மன வேதனை இருக்கிறதே- அப்பப்பா! ….. அதை வாய்விட்டுச் சொல்ல முடியாது. ஆத்துனை கொடுமை அது அனுபவித்தவர்களுக்கு மட்டும் புரியும் அது. அதை நான் என் வாழ்நதளில் முதல்முறையாக அனுபவிறேன். இதையெல்லாம் என் கண்களால் பார்க்கவேண்டும். என்று முன்பே தெரிந்திருருமால், நாண் திலீபன் இருந்து பக்கமமே தலைவைத்துப் படுத்திருக்கமாட்டேன் நான் முற்றுமுழுதாக நினைத்திருந்ததெல்லாம் இதுதான்: இந்தியா ஓரு பழம்பெருமைமிக்க ஜனநாயக நாடு: காந்தி பிறந்த பொன்னான பூமி: அகிம்சையைப் பற்றியும் - உண்ணாவிரதத்தைப் பற்றியும் உலகில்பெருமைப்படக்கூடிய அளவுக்கு காத்யடிகள் மூலம் புகழ்பெற்ற நாடு: அப்படிப்பட்ட ஓரு நாட்டிடம் நீதிகேட்டு அமிம்சை வழியில் உண்ணாவிரததை போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், உண்மையியேலே பாக்கியசாலிதான். ஏனெனில், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த நாடு நிச் சயமாக திலீபனுக்கும் ஓர் நல்ல வழியைக் வழியைக் காட்டத்தான் செய்யும்…. ஆதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஓரளவாது இந்திய அரசு நிறைவேற்றத்தான் போகிறது… என்ற எண்ணத்தில்தான் மூடிக்கொண்டு… இந்தத் தியாக வேள்வியில் என்னால் முடிந்த பங்கைச் செலுத்துவதற்குத் தயாரானேன். நூன் நினைத்ததெல்லாம்… இவ்வளவு விரைவில் மாயமான் ஆகிவிடும் என்று நான் கனவுகூடக் கண்டிருக்கவில்லை………… எத்தனை பெரிய ஏமாற்றம் எத்தனை பெரிய தவிப்பு? இன்றைய நிலையில் திலீபன் இருந்த நிலையைப் பார்த்தபோது. நும்பிக்கையே அற்றுவிட்டது. இனி ஓரு நல்ல திர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் பிறகு திலீபனை ஆஸ்பத்திரிக்கு அனுமதித்தாலும் காப்பாற்ற முடியுமா என்பது. என்னைப் பொறுத்த அளவில் கேள்விக்குறிதான். அப்படியிருக்க........... கடவுளே! மனித தர்மத்துக்கு கிடைக்கப் போகும் பரிசு இதுதானா? திலீபனைக் கொல்வதற்கு அவர்கள் திடமனம் பூண்டுவிட்டனர். என்;பது. புரிந்துவிட்டது. அதோ வானத்தில் ஓர் வயோதிப உருவம் முகில்கனைக் கிழித்துக்கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவ்வுருவத்தின் தலையிலே மயிரைலே………கண்களிலே வெள்ளை கண்ணாடி ……அந்தக் கண்களில் அருவியாக வழிந்து கொண்டிருக்கிறது…அது என்ன? இரத்தமா? அந்த "மனிதன்" இரத்தக் கண்ணீர் சொரிகிறாரே…… ஏன்? ஏன்? ஏன்? அடுத்து வேறு ஓரு உருவம்! அதன் தலையிலும் மயிரைக் காணவில்லை …….. வர்னத்தின் நடுவலே வெள்ளரசு மரத்தின் அடியிலே அமர்ந்திருக்கும் அந்த உருவம் எம்மை, இல்லை திலீபனையே பார்த்துக்கொண்டிருக்கிறது. பௌர்ணமி நிலவில் அந்தக் கருணை முகத்திலே…கருனையைத் தேடுகின்றேன்… ஆனால் காணமுடியவில்லை… ஏன்……. ஏன்…..? இந்திய மண்ணில் என்றே தோன்றி மறைந்துவிட்ட அந்த இரு சோதிகளும் அல்ல, உருவங்களும் வெகுநேரம் திலீபனைப்பார்க்க முடியாமல் வெட்கித் தலை குனிந்தவாறு சிறிது சிறிதாக என் கண்களை விட்டு மறைந்து கொண்டிருக்கின்றன….. நேற்று சிறிதளவாவது அசைந்து கொண்டிருந்த திலீபனின் கை, கால்கள் இன்று அசைவற்று சோர்ந்து விட்டன. உள்மூச்சு மட்டும் பலமாக இழுத்துக்கொண்டிருக்கின்றது. கண்கள் உச்சியிலே குத்திவிட்டு நிற்கின்றன. உடலின் நிறம் சிறிது நீலமாக மாறத்தொடங்கி விட்டன. நாடித்துடிப்பைப் பரிசோதிக்கின்றேன் 52. இரத்த அழுத்தம் -80/50. சராசரி மனிதனின் அளவுகளைவிட எல்லாமே மிகவும் குறைந்துள்ளன. இனித் திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம். ஐயோ…. . அதைநினைத்துப்பார்க்கவே நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கின்றது. நெஞ்சே இந்தக் கணமே நீ வெடித்துவிடக்கூடாதா? அன்று திலீபன் கிட்டுஅண்ணாவைப் பார்க்கவேண்டும் என்றாரே? இதற்காகத்தான? இந்திய அரசு தன் கோரிக்கைகளை நிறைவேற்றாது என்பதை அவர் உள்ளுர அறிந்தவர் போல் அன்று உண்ணாவிரத மேடையிலிருந்து எவ்வளவு தீர்க்கதரிசியாக இதைக் கூறினார். "நான் இறப்பது நிச்சயம்…. ஆப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர் க ளுடன் சேர்ந்து… தமிழீழம் மலர்வதைப் பார்ப்பேன்…" இந்த வார்த்தைகளை இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். திலீபன், கிட்டு அண்ணா மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தானோ அதைப் போல் அவரும் திலீபன் மீது உயிரையே வைத்திருப்பது எனக்குத் தெரியும். கிட்டு அண்ணா யாழ் மாவட்ட தளபதியாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணக் குடா நாட்டை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரும் பாடுபட்டு உழைத்தவர். திட்மிடும் சாதுர்யம் அதை நிறைவேற்றுவதில் மிகச் சாதுர்யம்… எதிரியைப் பந்தாடுவதில் ராஜதந்திரம். இவற்றுடன் குறிதவறாமல் சுடுவதிலும் தன்னிகரற்றவரான தளபதி கிட்டுவும் , யாழ் மாவட்ட அரசியல் பிரிவுத் தலைவன் திலீபனும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்த மபெரும் பொக்கிசம் என்று தான் கூறவேண்டும். இவர்களை உறுப்பினர்களாகப் பெற்ற உறுதி மிக்க தலைவனை நாம் பெற்றுள்ளோம். கிட்டு அண்ணாவைப் பார்க்கவேண்டும் என்று திலீபன் அன்று மேடையிலிருந்து கூறிய போது அதை நான் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் இன்று…? இந்த நிலையில் அவரது அந்த ஆசை நிறைவேறாமலேயே என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இதை என்றே ஒரு நாள் கிட்டு அண்ணாவிடம் கூறும் போது அவர் மனம் எவ்வளவு வேதனையடையும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க எனக்கு இந்த உலகத்தின் மீது வெறுப்பு வருகின்றது. இந்த மண்ணிற்காக நாம் எத்தனை அரும்பெரும் உயிர்களையெல்லாம் இழந்திருக்கின்றோம். நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தமது துப்பாக்கிகளைச் சிங்கள இராணுவத்திடமிருந்து காப்பாற்றுவதற்காக காயப்பட்டு நடக்க முடியாத நிலையில் தம்மைச் சுட்டுவிட்டு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடும் படி கட்டளையிட்ட சீலன், ஆனந்தன்…… இயக்க இரகசியங்கள் அடங்கிய முக்கிய விடையங்களையும் கோப்புக்கனையும் காப்பாற்றுவதற்காக கடைசிவரையும் தாக்குப் பிடித்து அவகளை மற்றவர்களிடம் எடுத்து அனுப்பிவிட்டு தன் உயிரைத் தியாகம் செய்த 'பண்டிதர்'. இயக்கப் போராளிகள் குடியிருந்த இடமொன்றில் வெடிகுண்டின் கிளிப் எதிர்பாராமல் விலகிவிட மற்றவர்களை அந்த அழியிலிருந்து காப்பாற்றுவதற்காக வெடிகுண்டை தன் வயிற்றுக்குள் அமுக்கிக் கொண்டு குப்புறப்படுத்து தன் உடலையே சிதறப்பண்ணி மற்றவர்களை அழிவினின்றும் காப்பாற்றிய தியாக வீரன் " அன்பு" இவர்களைவிட அவ்வப்போது சிங்கள இராணுவத்திடம் பிடிபடும் நிலையில் இயக்க ரகசியங்களை காப்பாற்றுவதற்காக சயனைட்டைத் தின்று தியாக மரணமடைந்தவர்கள் உலக வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத்தான் ஏராளம் ஏராளம். இந்த வழிகளையெல்லர் விட தன் வழி மிகவும் வேறுபட்டதாக இருக்கட்டும் என்பதற்காக திலீபன் இந்த முடிவிற்கு வந்தார்? இன்று மாலை வசாவிளான் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு ஆதரவாளர் அங்கிருந்து உண்ணாவிரத மேடை வரை தூக்குக் காவடியுடன் அழுதழுது வந்தது எல்லோரையும் கவர்ந்த ஒன்றாகும். வட்டுக்கோட்டை சிவன் கோவிலடி, அச்சுவேலி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக, மற்றும் சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவாள் போன்ற இடங்களிலெல்லாம் அடையாள உண்ணாவிரதமும் மறியல் போராட்டமும் பரந்தளவில் நடைபெற்றது. பளையிலிருந்து நாவற்குழி வரையுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 6000 மாணவ மாணவிகள் அழுத கண்களும் சிந்திய மூக்குமாக ஊர்வலமாக வந்து நல்லுர் மைதானத்தை நிறைத்தனர். அவர்களின் ஊர்வலத்தில் பார்க்குமிடமெல்லாம் புலிக்கொடிதான் பறந்துகொண்டிருந்தன. நாவந்துறையைச் சேர்ந்த மக்களின் உணர்ச்சி வெள்ளத்தை இன்று வந்த அவர்களின் ஊர்வலத்தின் மூலம் தான் அறியமுடிந்தது. முல்லைத்தீவு மாவட்டமெங்கும் எங்கும் உண்ணாவிரதமும் மறியலும் நடக்காத இடமே இல்லை என்று கூறிவிடலாம். 'திலீபன்' என்ற இந்தச் சிறிய கூட்டிற்குள் இருக்கும் இதயத்தை எத்தனை இலட்சம் மக்கள் தான் நேசிக்கிறார்கள்."மன்னிக்கவும் இலட்சமல்ல கோடி! தமிழ் நாட்டிலும் ஏன்? ஏனைய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் உள்ள தமிழர்கள் எல்லோருமே திலீபனுக்காக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றார்கள். பயணம் தொடரும்.....

திலீபனுடன் ஒன்பதாம் நாள் 23-09-1987<23ம் ஆண்டு நினைவு-2010

திலீபனுடன் ஒன்பதாம் நாள் -23-09-1987 அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. "கூ.......கூ.....குக்….கூ......" அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், தலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை. ஆனால் இந்தக் குயில்…? எம்மை - எம் இனத்தைக் காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே…. இந்த சிறு குயிலின் சோக கீதம் உலகத்தின் காதுகளில் இன்னுமா விழவில்லை…..? திலீபனை நன்றாக உற்றுப் பார்க்கிறேன். அவரின் உடலிலுள்ள சகல உறுப்புகளும் இன்று செயலற்றுக் கொண்டிருக்கின்றன. உதடுகள் அசைகின்றன. ஆனால் சத்தம் வெளிவரவில்லை. உதடுகள் பாளம், பாளமாக வெடித்து வெளிறிவிட்டிருந்தன. கண்கள் இருந்த இடங்களில் இரு பெரிய குழிகள் தெரிகின்றன. இன்று காலை எட்டரை மணியில் இருந்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பதினேழு பாடசாலைகளிலிருந்து சுமார் 5000 மாணவ மாணவிகள் அணிவகுத்து வந்து திலீபனைப் பார்த்துக் கண்கலங்கியவாறு மைதானத்தை நிறைத்துக் கொண்டிருந்தனர். யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும் ஏராளமாக வந்து பார்த்தனர். காலை ஒன்பது மணியளவில் யாழ். கோட்டை இந்திய இராணுவ முகாம் முன்பாக ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பிரதான வாசலில் அமர்ந்து, இந்தியப் படையினர் வெளியே வராதவாறு மறியல் செய்யத் தொடங்கினர். பொதுவாக திலீபனின் உடல் நிலை மோசமடைந்து வந்த அதே வேளை பொது மக்களின் குமுறலும் அதிகரிப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. திலீபன் தங்கள் குடும்பத்தில் ஒருவன் என்ற எண்ணமே ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. இன்று காலையில் இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங் அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகனைச் சந்தித்தார். பின்னர் இருவரும் தனித்தனியான வாகனங்களில் புறப்பட்டு யாழ் கோட்டை இராணுவ முகாமுக்குள் சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டனர்…… ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான் ! கோட்டை வாசலில் மறியல் செய்த ஆயிரக் கணக்கான பொது மக்களின் எழுச்சியைக் கண்ட பின்னர் தான் தளபதியவர்கள் தலைவர் பிரபாகனைக் காணப் பறந்து வந்திருக்க வேண்டும். இன்று காலை 10 மணியளவில் திலீபனின் மேடைக்கு அருகேயுள்ள மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. இந்திய வம்சாவழியினர் சார்பில் பேசிய திரு.கணேசராசா என்பவர் 'பாரத அரசு விடுதலைப் புலிகளின் ஐந்து அம்சக் கோரிக்கையை ஏற்று திலீபனின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டுமென்றும் இல்லையேல் இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு இந்திய அரசே பொறுப் பேற்க வேண்டும்' என்றும் பேசினார். திலீபனை பார்வையிட வருவோர் தங்கள் கருத்துக்களை சில நாட்களாக எழுத்து மூலம் வழங்கி வருகின்றனர். இதற்காக நான்கு போராளிகள் கை ஓயாமல் ஓர் மூலையில் அமர்ந்திருந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை 1500 இற்கும் மேற்பட்டோர் தமது கருத்துக்களை மிக உருக்கமாக எழுதியிருந்தனர். யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சகல அரச அலுவலகங்களிலும் வேலைகள் நடைபெறாத வண்ணம் பொதுமக்கள் மறியல் செய்து வருகின்றனர். சங்கானை உதவி அரச அதிபர் பிரிவிலும் புங்குடுதீவு அரசாங்க அதிபர் பிரிவிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திலீபனுக்கு ஆதரவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும் மறியலும் இருந்தனர். இதைப் போல் பல கிராமங்களில் சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து மக்கள் உண்ணா நோன்பு அனுஷ்டித்தன். எங்கும் - எதிலும் திலீபன் என்ற கோபுரம் மக்கள் சக்தியினால் உயர்ந்து விட்டதைக் காண முடிந்தது. ஆம் ! மக்கள் புரட்சி வெடிக்கத் தொடங்கிவிட்டது. திலீபனின் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல தொண்டர் ஸ்தாபனங்கள், இந்தியப் பிரதமர் திரு. ராஜீவ் காந்திக்கு மகஐர்களை இன்று அனுப்பி வைத்திருப்பதாகச் சில தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. 1. யாழ் பிரiஐகள் குழுக்களின் இணைப்புக்குழு. (இந்தியத் தூதுவர் ஊடாக அனுப்பப்பட்டது) 2. வட பிராந்திய மினி பஸ் சேவைச் சங்கம். (பிரதி தமிழக முதல்வருக்கும் அனுப்பப்பட்டது) 3. வட மாகாணம் பனம்பொருள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஐம் 4. தொண்டைமானாறு கிராம மட்ட கடற் தொழில் சமூக அபிவிருத்திச் சங்கம் 5. வட பிராந்திய போக்குவரத்து ஊழியர் சங்கம் என்பன அவற்றில் சிலவாகும். இன்று மன்னாரிலுள்ள இந்திய அமைதிப்படை முகாமுக்கு முன், திலீபனுக்கு ஆதரவாக மகஐர் ஒன்றைக் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு சென்ற போது ஆத்திரமடைந்த இந்திய அமைதி காக்கும் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது ஒருவர் அதில் இறந்து விட்டதாகவும், 18 பேர் படுகாயமடைந்ததாகவும் எமது தகவல் தொடர்புச் சாதனச் செய்திகள் கூறுகின்றன. இன்று மாலை என் காதில் ஓர் இனிய செய்தி வந்து விழுந்தது. இந்தியத் தூதுவர் டிக்ஷிற்-தலைவர் பிரபாவைச் சந்திப்பதற்கு வந்திருக்கிறார் என்பது தான் அது! ஆம் பிற்பகல் 1-30 மணியிலிருந்து பிற்பகல் 6-30 மணிவரை, இரு குழுக்களும் அமைதியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தின. இந்தியத் தரப்பில் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்கள்:- l தூதுவர் திரு. ஜெ. ஏன். டிக்ஷிற் l இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங் l அமைதி காக்கும் படைத் தளபதி மேஐர் ஜெனரல் ஹர்கீத் சிங் l பிரிகேடியர் பெர்னான்டஸ் l இந்தியத் தூதரகப் பாதுகாப்பு அதிகாரி, கப்டன் குப்தா ஆகியோர் விடுதலைப் புலிகளின் தரப்பில்:- l தலைவர். திரு. வே. பிரபாகரன் l பிரதித் தலைவர். திரு. கோ. மகேந்திரராசா (மாத்தயா). l திரு. அன்ரன் பாலசிங்கம் (அரசியல் ஆலோசகர்) l திரு. செ. கோடீஸ்வரன் (வழக்கறிஞர்) l திரு. சிவானந்தசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்ததும், என்னை அறியாமலே என் மனம் துள்ளிக் குதித்தது. ஒன்பதாம் நாளான இன்று ஒரு நல்ல முடிவு எப்படியும் ஏற்படும்……. அந்த நல்ல முடிவு ஏற்பட்டதும் உடனடியாக திலீபனை யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதித்து அவசர சிகிச்சைப் பிரிவில் விசேட சிகிச்சைகள் அளித்தால் 24 மணித்தியாலங்களில் அவர் ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்….. எமக்காக இத்தனை நாட்களாகத் துன்பப்பட்டு அணு, அணுவாகத் தன்னை வருத்திக் கொண்டிருக்கும் அந்த நல்ல இதயம், நிச்சயம் பூத்துக் குலுங்கத்தான் போகிறது…….. என்ற கற்பனைக் கடலில் இரவு 7-30 மணிவரை நானும், என் நண்பர்களும், மிதந்து கொண்டிருந்தோம். இரவு 7-30 மணிக்கு அந்தச் செய்தி என் காதில் விழந்தபோது இந்த உலகமே தலை கீழாக சுற்றத் தொடங்கியது….. அந்தக் கற்பனைக் கோட்டை ஒரே நொடியில் தகர்த்து தவிடு பொடியாகியது. ஆம் ! பேச்சுவார்த்தையின் போது இந்தியத் தூதுவரால் வெறும் உறுதி மொழிகளைத்தான் தர முடிந்தது…. திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஒரு தொடர் கதையாகவே ஆகிவிட்டது. எழுத்தில் எந்தவித ஊறுதி மொழிகளையும் தர இந்தியத் தரப்பு விரும்பவில்லை என்பதை அவர்களின் நடத்தை உறுதி செய்தது. திலீபனின் மரணப் பயணம் இறுதியானது என்பதையும் அது உணர்த்தியது. பயணம் தொடரும்........

திலீபனுடன் எட்டாம்ம் நாள் 22-09-1987<23ம் ஆண்டு நினைவு-2010

திலீபனுடன் எட்டாம் நாள் -22-09-1987 இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள். உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென் யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே மக்கயில் பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப், பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள். அத்துடன் தமிழீழத்தின் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்கொண்டு தம் எழுச்சியைக் காட்டிக் கொண்டிருந்தனர். மட்டக்களப்பு மாநகரில் 'மதன்' என்ற இளம் தளபதி ஒருவர், மக்களின் ஆதரவுடன் தன் போராட்டத்தைத் திலீபனின் வழியில் இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்கவிருப்பதாக என்னிடம் மாத்தா கூறினார். இந்த மதனைத் தெரியாதவர்களே மட்டக்களப்பில் இல்லை. 1985 ம் ஆண்டு நான் இந்தியாவில் இருந்தபோது மதன் தமிழீழத்துக்குச் சென்றார். பல போர்க்களங்களைத் தன் இளம் வயதில் சந்தித்தார். மட்டக்களப்பு மாவட்டத் தளபதியாக இருந்த கருணாவுடன் சேர்ந்து திருகோணமலையிலுள்ள குச்சவெளிப் பொலிஸ் நிலையத்தைத் தகர்த்தவர்களுள், இந்த மதனும் ஒருவர். இதே குச்சவெளிப் பொலிஸ் நிலையத் தாக்குதல்களில் முக்கிய பங்கெடுத்தவர்கள் என் மனதில் மட்டுமன்றி தமிழ் மக்களின் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்திருக்கின்றார்கள். அவர்கள் வேறு யாரமல்ல….. லெப்டினன்ட் கேர்ணல் சந்தோஷம், லெப்டினன்ட் கேர்ணல் குமரப்பா, லெப்டினன்ட் கேர்ணல் புலேந்திரன் ஆகியோர்தான். தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலே திருச் செல்வம், என்ற போராளியும், அவருடன் சே;ந்து பல பொது மக்களும், உண்ணாவிரதப் போராட்டத்தினை நாளை தொடங்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. தமிழீழம் எங்குமே அஹிம்சைப் போர் தீப்பிளம்பாக எரிந்து கொண்டிருக்கிறது. திலீபன் ஓர் மகத்தான மனிதன் தான். இல்லைனெ;றால் அவன் வழியிலே இத்தனை மக்கள் சக்தியா…..? வல்வெட்டித்துறையிலே திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் ஐந்து தமிழர்களைத், தலைவர் பிரபாகரன் நேரில் சென்று சந்தித்தபோது எடுக்கப்பட்ட படத்தையும், திலீபனின் படத்தையும், பத்திரிகைகளில் அருகருகே பிரசுரித்திருந்தார்கள். "ஈழமுரசு" பத்திரிகையில் திலீபனுக்கு அடுத்த மேடையிலே சாகும் வரை (நீராகாரம் அருந்தாமல்) உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் தி ருமதி நல்லையா, செல்வி. குகசாந்தினி, செல்வி.சிவா துரையப்பா ஆகியோரின் படங்களைப் போட்டிருந்தார்கள். மொத்தத்தில் எல்லாமே திலீபனின் அகிம்சைப் போருக்கு வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருந்தன. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமன்றி ஒவ்வொரு ஊரிலிருந்தும் பல பொதுசன அமைப்புக்கள் அணியாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுவதோடு திலீபனுக்காக கவிதை வடிவில் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து விநியோகித்து வந்தன. இந்த எழுச்சியை – மக்களின் வெள்ளத்தைப் பார்ப்பதற்கு என்றே தினமும் யாழ்ப்பாண நகரத்தைச் சுற்றி; சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. இந்திய சமாதானப் படையின் ஹெலிகொப்டர்கள். புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல. அஹிம்சைப் போராட்டத்திலும் சாதனை படைக்கும் திறன் பெற்றவர்கள் என்ற பேருண்மை, உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. திலீபனின் சாதனை உலக அரங்கிலே ஓர் சரித்திரமாகிக் கொண்டிருக்கிறது. உலகிலே முதன் முதலாக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்தவர். என்ற பெருமையுடன் அதோ கட்டிலில் துவண்டு வதங்கி, உறங்கிக் கொண்டிருக்கிறார் திலீபன். அவரது கண்கள் இரண்டிலும் குழிகள் விழுந்து விட்டன. முகம் சருகைப்போல் காய்ந்து கிடக்கிறது. தலைமயிர்கள் குழம்பிக் கிடக்கின்றன…… வயிறு ஒட்டிவிட்டது. நீரின்றி வாடிக்கிடக்கும் ஓர் கொடியினைப் போல் வதங்கிக் கிடக்கின்றார். அவரால் விழிகளைத் திறக்க முடியவில்லை. பார்க்க முடியவில்லை….. பேச முடியவில்லை…… சிரிக்க முடியவில்லை……… ஆம் ! தூங்க மட்டும்தான் முடிகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்தக் கோல நிலவு தன் எழிலை இழந்து வாடி வதங்கப் போகிறது? முரளியின் பொறுப்பிலுள்ள மாணவர் அமைப்பைச் (ளு.ழு.டு.வு) சேர்ந்த மாணவ- மாணவிகள் சனக்கூட்டத்தைக் கட்டுப்படு; த்திக் கொண்டிருக்கின்றனர். மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், சனங்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். புக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி விட்டன. பெரும்பாலானோர் அழுதழுது கவிதை படிக்கின்றார்கள். "சிந்திய குருதியால் சிவந்த தமிழ் மண்ணில் சந்ததி ஒன்று சரித்திரம் படைக்க…. முந்திடும் என்பதால்…. முளையிலே கிள்ளிட….. சுpந்தனை செய்தவர் சிறுநரிக் கூட்டமாய்…. 'இந்தியப்படையெனும்' பெயருடன் வந்தெம் சந்திரன் போன்ற… திலீபனின் உயிரைப் பறித்திட எண்ணினால்….. பாரிலே புரட்சி….. வெடித்திடும் என்று…. வெறியுடன் அவர்களை….. எச்சரிக்கின்றேன் !" மேடையிலே முழங்கிக் கொண்டிருந்த இந்தக் கவிதை என் மனத்திலே ஆழமாகப் பதிகிறது. இன்று திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது என்பதை அவரின் வைத்தியக் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன. இரத்த அழுத்தம் - 80/50 நாடித் துடிப்பு – 140 சுவாசம் - 24 பயணம் தொடரும்........

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner